மேலும் அறிய

15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது

தந்தை இல்லாத 15 வயது பேத்தியை, தாத்தாவே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள மூவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் , அவரது மனைவியும் 15 வயது மகளும் அதே கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், குடும்பத்திற்கு நெருங்கிய உறவினராகவும், சிறுமியின் தாய்வழி தாத்தாவுமான 73 வயதுடைய ராசு, அடிக்கடி அந்த வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. எனவே சிறுமி அவரிடம் நன்றாக பேசி பழகி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் ராசு வலுக் கட்டாயமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார்.

சிறுமி மூன்று மாதம் கர்ப்பம்

இதனால் அச்சமடைந்த சிறுமி இது குறித்து உடனடியாக தனது தாயிடம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த ரவிச் சந்திரனின் மனைவி ராசுவை கண்டித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்.

ஆனால் அதன் பிறகு தனது செயல்களை நிறுத்தாத ராசு , கடந்த ஏப்ரல் 11 ம் தேதி மதியம் வீட்டில் யாரும் இல்லாமால் சிறுமி தனிமையில் இருப்பதை அறிந்த ராசு மீண்டும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை அறிந்த சிறுமியின் தாய் மற்ற உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்த நிலையில் அவர்கள் ராசுவை சரமாரியாக தாக்கி கண்டித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிறுமியை அவரது தாய் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது , அவர் மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.

போக்சோ வழக்கு பதிவு

இதனால் அதிர்ச்சியடைந்த தாயும், சிறுமியும் உடனடியாக காவல் துறையை நாடி புகார் அளித்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், 73 வயதுடைய ராசு மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் தீவிர விசாரணையில் பலமுறை சிறுமியை மிரட்டி அவரிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் தெரிய வந்தது. தந்தை இல்லாமல் தாயுடன் தனியாக வசித்து வந்த 15 வயது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக 73 வயது தாத்தா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

Advertisement

தலைப்பு செய்திகள்

கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget