சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து போக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், விமான நிலையம், சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையம், தேனாம்பேட்டை, கிண்டி, சேப்பாக்கம் என பல இடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 

Continues below advertisement

மேலும் பல இடங்களில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பல இடங்களுக்கு இணைப்பு சேவையானது இல்லாத நிலையானது நீடித்து வருகிறது. இதனையடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இணைப்புச் சேவையை வழங்க 220 குளிர் சாதன மின்சார மினி பேருந்துகள் முதற்கட்டமாக கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. 

அந்த வகையில், சென்னையில் உள்ள பல்வேறு  மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து, மாநகர போக்குவரத்து கழகம் வாயிலாக, முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், குடியிருப்புகள், தனியார் ஐ.டி., நிறுவனங்களை இணைக்கும் வகையில் சுமார் 220 குளிர்சாதன மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 5 கி.மீ., துாரத்துக்கு மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த மினி பேருந்தானது காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை 5 நிமிட இடைவெளியில் ஒரு மினி பேருந்து சேவையானது இயக்கப்படவுள்ளது. இந்த மினி பேருந்துகான கட் டணம் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த மினி பேருந்து சேவையானது செப்டம்பர் முதல் 'ஏசி' சிற்றுந்துகள் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன. 

Continues below advertisement

அந்த வகையில் 70 பேருந்துகள் மினி பேருந்துகள் 7 மீட்டர் நீளம், 2.2 மீட்டர் அகலம் கொண்டதாகவும், மீதமுள்ள 150 மினி பேருந்துகள்  5.5 மீட்டர் நீளம், 1.8 மீட்டர் அலகம் கொண்டதாக வடிவமைக்கப்படவுள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்பட்டு, மினி பேருந்து தயாரிப்பு நிறுவனம் தேர்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.