தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக ராகி விநியோகம் செய்ய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை அரசாணை வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், சட்டப்பேரவையில் 8.4.2022 அன்று நடந்த உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக்கோரிக்கையின்போது, நீலகிரி மற்றும் தர்மபுரியில் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு பொதுவிநி யோக திட்டத்தின் கீழ் ராகி விநியோகிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் அரிசிக்கு பதிலாக ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ ராகி என்ற விகிதத்தில் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் ராகி அதிகம் விளையும் முக்கிய மாவட்டங்கள் ஆகும். எனவே, சோதனை அடிப்படையில் அரிசி அட்டைதாரர்களுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில், நீலகிரி மற்றும் வழங்குகிறது. தர்மபுரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக கிலோ ராகியை இலவசமாக வழங்க உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு துறை ஆணையர் பரிந்துரைத்துள்ளார்.


ராகியின் தேவை மாதம் தோறும் 1360 மெட்ரின் டன் ஆகும். ராகியை இந்திய உணவு கழகத்திடம் இருந்து மத்திய தொகுப்பு. ஒதுக்கீட்டின் கீழ் முதலில் கொள்முதல் செய்யலாம். எனவும், இதன்மூலம் கோதுமையின் மாதாந்திர ஒதுக்கீட்டை குறைக்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை வைக்குமாறும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் பரிந்துரை செய்துள்ளார்.இந்த பரிந்துரையை ஏற்று ராசி வழங்கும் திட்டத்துக்கு நிர்வாக அனுமதியை அரசு வழங்குகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 


கடத்தலை தடுக்க தனிப்படை:


தமிழ்நாட்டிலிருந்து அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஆபாஷ்குமார், எஸ். பி. பாஸ்கரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் டி.எஸ்.பி. முத்துக்குமார் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.


மக்கள் கோரிக்கை:


அரசு, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை, சிலர் பதுக்கி வைத்து பின்பு, அதனை கேரளாவில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த கடத்தல் கும்பலை பிடிக்க ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசாரை பணியமர்த்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டுமென அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண