மேலும் அறிய

TN Govt employees : அரசு ஊழியர்களுக்கு குஷியோ குஷி.! காப்பீடு, கடன் சலுகைகள் - அசத்தலான அறிவிப்பை சொன்ன தமிழக அரசு

TN Govt employees : சம்பளக் கணக்கு வைத்துள்ள அரசு ஊழியர்களுக்கு காப்பீடு, கடன் சலுகைகள் வழங்கும் வகையில் வங்கிகளுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ஆயுள் காப்பீடாக 10 லட்சம் ரூபாயும், தனிப்பட்ட விபத்து காப்பீடாக 1 கோடி ரூபாயும் வழங்க அந்த வங்கிகள் ஒப்புக்கொண்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான சலுகைகள்

அரசு ஊழியர்களுக்கான பல்வேறு சலுகைகளை மத்திய மற்றும் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, பண்டிகை கால முன்பண சலுகை, மகப்பேறு கால விடுமுறை அதிகரிப்பு என பல அறிவிப்புகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துமவனையில் அனுமதிக்கும் போதும், விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் போது மருத்துவ செலவுக்காக பல லட்சம் ரூபாய் தேவைப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் பணத்தை கட்ட முடியாமல் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்ட வந்தனர்.

இதனையடுத்து தங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில்,  இதனை செயல்படுத்தும் வகையில் தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், மாநில அரசுப் ஊழியர்களுக்கு விபத்து காப்பீடு மற்றும் கடன் சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் படி தமிழக அரசு ஊழியர்களுக்கு சில சிறப்பு சேவைகளை வழங்க முன்னணி வங்கிகள் வழங்க முன்வந்துள்ளதாக தெரிவித்திருந்தார். 

வங்கிகளோடு தமிழக அரசு ஒப்பந்தம்

அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு மாதம், மாதம்  சம்பளம் வரும் வங்கி கணக்கு இருக்கும் இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 முன்னணி வங்கிகளுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஆயுள் காப்பீடாக 10 லட்சம் ரூபாயும், தனிப்பட்ட விபத்து காப்பீடாக 1 கோடி ரூபாயும் வழங்க அந்த வங்கிகள் ஒப்புக்கொண்டது. மேலும் தனிப்பட்ட விபத்து காப்பீட்டின் மூலம் இறந்துபோன அரசு ஊழியரின் குழந்தைகளுக்கு கல்வி உதவிகள் மற்றும் திருமணமாகாத பெண் பிள்ளைகளுக்கு திருமண உதவிகளை வங்கிகள் வழங்க வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டு, இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு வங்கிகளிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அரசு ஊழியர்களுக்கு காப்பீடு மற்றும் கடன் சலுகைகள்

இந்த நிலையில் இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 முன்னணி வங்கிகளுடன் சேர்த்து மேலும் 3 வங்கிகளான பஞ்சாப் நேஷனல் வங்கி, டி.என்.எஸ்.சி,பாங்க் ஆப் இந்தியா இந்த சலுகைகளை தங்களிடம் சம்பளக் கணக்கு வைத்துள்ள அரசு ஊழியர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது.எ னவே இந்த வங்கிகளுடனும் அரசுக் கருவூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் காப்பீடு மற்றும் பல்வேறு சலுகைகளை பெற வாய்ப்பு உருவாகியுள்ளது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

19 வயது இளம் பெண்ணுக்கு , காதல் டார்ச்சர் கொடுத்த 65 வயது முதியவர் !!
19 வயது இளம் பெண்ணுக்கு , காதல் டார்ச்சர் கொடுத்த 65 வயது முதியவர் !!
தேவகோட்டையில் சீமான் வாக்கு சேகரிப்பு.. ஜமாத் உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை - என்ன செய்ய போகிறேன் என்பதை உடைத்துச் சொன்னார் !
தேவகோட்டையில் சீமான் வாக்கு சேகரிப்பு.. ஜமாத் உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை - என்ன செய்ய போகிறேன் என்பதை உடைத்துச் சொன்னார் !
" இளைஞருடன் திருமணத்தை மீறிய உறவு " சாலையில் கணவன் செய்த வெறிச் செயல்
" உன்னுடன் இருப்பது யார் " இளம் பெண்ணுக்கு வந்த போன் கால் !! பதறிய இளம் பெண் - நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
" Whats App பயனர்களுக்கு அதிர்ச்சி " சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
Embed widget