மேலும் அறிய

Kodaikanal Low Budget Trip: வெறும் 510 ரூபாயில் சென்னை டூ கொடைக்கானல்: பட்ஜெட் பயணிகளுக்கான சூப்பர் டிப்ஸ்!

Chennai to Kodaikanal Low Budget Trip: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, கொடைக்கானலுக்கு தினமும் நேரடி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

சென்னையிலிருந்து மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிடுபவர்கள், இனி அதிக பணம் செலவாகும் என்று கவலைப்படத் தேவையில்லை. முறையான திட்டமிடல் இருந்தால், மிகக் குறைந்த செலவில் இந்தப் பயணத்தை இனிமையாக முடிக்க முடியும். இந்தப் பயணத்தைத் தொடங்க பயணிகள் சென்னையின் புதிய கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கிருந்து திண்டுக்கல் அல்லது வத்தலகுண்டு நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்துகளைத் தேர்ந்தெடுப்பது முதல் படியாகும். கிளாம்பாக்கத்திலிருந்து வத்தலகுண்டு செல்வதற்கான பேருந்து கட்டணம் சுமார் 420 ரூபாய் மட்டுமே.

வத்தலகுண்டு டூ கொடைக்கானல்: மலைப்பாதை பயணம்

வத்தலகுண்டு பேருந்து நிலையத்தை அடைந்த பிறகு, அங்கிருந்து கொடைக்கானலுக்குச் செல்ல 24 மணி நேரமும் தொடர்ச்சியாக அரசுப் பேருந்து வசதிகள் உள்ளன. மலைப்பாதையில் பயணித்து கொடைக்கானலை அடைய ஒரு நபருக்கு வெறும் 90 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது, ஆக மொத்தம், சென்னையிலிருந்து கொடைக்கானல் மலை உச்சியை அடைய ஒருவருக்கு ஆகும் மொத்தப் பயணச் செலவு வெறும் 510 ரூபாய் மட்டுமே. இது தனியார் பேருந்து அல்லது சொந்த வாகனங்களில் செல்வதை விட மிக மிகக் குறைவான தொகையாகும்.

தங்கும் இடம் மற்றும் உணவுத் திட்டம்

பயணக் கட்டணத்தைக் குறைப்பது போலவே, தங்கும் இடத்திலும் பணத்தைச் சேமிக்க வழிகள் உள்ளன. நண்பர்களுடன் குழுவாகச் செல்பவர்கள் அங்குள்ள 'டார்மிட்ரி' (Dormitory) வகை தங்குமிடங்களைத் தேர்வு செய்வதன் மூலம் தங்கும் செலவை பெருமளவு மிச்சப்படுத்தலாம். மேலும், ஆடம்பர ஹோட்டல்களைத் தவிர்த்து உள்ளூர் உணவகங்களில் சாப்பிடுவதன் மூலம் உணவுக்கான பட்ஜெட்டையும் கட்டுக்குள் வைக்க முடியும்.

சிக்கனமான சுற்றுலா அனுபவம்

கொடைக்கானல் நகருக்குள் உள்ள சுற்றுலாத் தலங்களான ஏரி, பிரையண்ட் பூங்கா மற்றும் பில்லர் ராக் போன்ற இடங்களைப் பார்வையிட உள்ளூர் பேருந்து வசதிகளைப் பயன்படுத்தலாம். இந்த ‘பட்ஜெட் டிரிப்’ ஐடியா, குறிப்பாக மாணவர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்குப் பெரும் உதவியாக இருக்கும். அதிக செலவின்றி இயற்கையை ரசிக்க விரும்புபவர்கள், அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தி இந்த எளிய பயண முறையைப் பின்பற்றலாம் என்று அந்தச் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் அதிரடி !! வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி விற்ற நபர் சிறையில் அடைப்பு
சென்னையில் அதிரடி !! வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி விற்ற நபர் சிறையில் அடைப்பு
பார்சல் கொடுக்க வந்த டெலிவரி பாய் பெண்ணிடம் அத்துமீறல் !! சென்னையில் பரபரப்பு
பார்சல் கொடுக்க வந்த டெலிவரி பாய் பெண்ணிடம் அத்துமீறல் !! சென்னையில் பரபரப்பு
கள்ளக்காதல் விபரீதம் ; கணவன் , அக்காவை ஜன்னல் வழியே பெட்ரோல் ஊற்றி எரித்த முதல் மனைவி
கள்ளக்காதல் விபரீதம் ; கணவன் , அக்காவை ஜன்னல் வழியே பெட்ரோல் ஊற்றி எரித்த முதல் மனைவி
பள்ளிகள் நாளை திறப்பு - மாணவர்களை பைக்கில் அனுப்புவதை தவிர்க்க வேண்டும் - காவல்துறை அறிவுறுத்தல் !
பள்ளிகள் நாளை திறப்பு - மாணவர்களை பைக்கில் அனுப்புவதை தவிர்க்க வேண்டும் - காவல்துறை அறிவுறுத்தல் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Donald Trump: “நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
“நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Best Mileage CNG Cars: பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
Embed widget