ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது உச்சிப்புளி. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படும் இந்த பகுதியில் இன்று காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர்.

5 பேர் உயிரிழப்பு:

Continues below advertisement


அப்போது, அந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசுப்பேருந்து மீது மோதியது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


விபத்தை கண்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.