மேலும் அறிய

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் தங்கத்தேர் உற்சவம்: பக்தர்களின் பரவசம்! அறியாத ரகசியம் இதோ!

Golden Chariot Festival: "தை மாதம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்கத்தேர் உற்சவம் நடைபெற்றது."

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத்தேர் உற்சவம் நடைபெற்றது. லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் காமாட்சி அம்மன் எழுந்தருளிய தங்கத்தேரினை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் தங்கத்தேர் உற்சவம்

நகரேஷூ காஞ்சி என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவிலில் தை மாத வெள்ளிக்கிழமையை ஒட்டி தங்கத்தேர் உற்சவம் நடைபெற்றது.

தங்கத்தேர் உற்சவம் நடைபெறுவதை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பட்டு உடுத்தி திருவாபரணங்கள், அணிவித்து தாழம்பூ, மல்லிகைப்பூ, ரோஜாப்பூ மலர் மாலைகள் சூட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தகதகவென ஜொலிக்கும் தங்கத்தேரில் லட்சுமி,சரஸ்வதி தேவிகளுடன் காமாட்சி அம்மனை எழுந்தருள செய்தனர்.

பின்னர் மேளதாள, நாதஸ்வர வாத்தியங்கள் ஒலிக்க காஞ்சி காமாட்சி அம்மன் எழுந்தருளிய தங்க தேரினை உபயதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து செல்ல கோவில் வளாகத்தில் உலா வர செய்தனர். தங்கத்தேர் உற்சவத்தில் எழுந்தருளி காட்சி தந்த காமாட்சி அம்மனை உள்ளூர் வெளியூர் என திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர். தங்கத்தேர் உற்சவத்தில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமில்லாமல் வெளியூர் பக்தர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் Kanchipuram Kamatchi Amman Temple 

கோவில் நகரமாக இருக்கும் காஞ்சிபுரம் நகரத்திற்கு மிக முக்கிய அடையாளமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. காமாட்சி என்றால் கருணை நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. காமாட்சி அம்மனை மனம் உருகி வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. புராண காலத்தில் பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்துள்ளான்.

பந்தகாசுரன் பிரம்மதேவனிடம் பல்வேறு வரங்களை பெற்று சக்தி மிக்கவனாக இருந்து வந்துள்ளார். பிரம்ம தேவன் அளித்த வரங்களின் சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கு, பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால் இறுதியாக சிவபெருமானிடம் சென்று முறையிட்டுள்ளனர். பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குதான் உள்ளது.

சிவபெருமானின் வாக்குப்படி, அனைவரும் அன்னை பராசக்தியிடம் சென்று முறையிட்டுள்ளனர். அத்தருணம் பராசக்தி, காஞ்சிபுரத்தில் கிளி வடிவம் கொண்டு ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தாள். அங்கு சென்ற தேவர்கள் மற்றும் முனிவர்கள் அன்னை பராசக்திடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து முறையிட்டுள்ளனர்.

கருணை உள்ளம் படைத்த அன்னை பார்வதி முனிவர்கள் மற்றும் தேவர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கி, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக பராசக்தி தெரிவித்தார். பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை பராசக்தி 18 கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள். இதனை அடுத்த அசுரனை வதம் செய்தார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK MP: அனுபவம் + அறிவு! இவர்கள் தான் ராஜ்யசபா எம்.பிக்கள்! திமுகவின் டெல்லி படை ரெடி
DMK MP: அனுபவம் + அறிவு! இவர்கள் தான் ராஜ்யசபா எம்.பிக்கள்! திமுகவின் டெல்லி படை ரெடி
EPS: சீட்டைப் பிரிப்பதில் தலைவலி! எந்தெந்த கட்சி எத்தனை சீட்டு? என்ன செய்வார் இபிஎஸ்?
EPS: சீட்டைப் பிரிப்பதில் தலைவலி! எந்தெந்த கட்சி எத்தனை சீட்டு? என்ன செய்வார் இபிஎஸ்?
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
Jayakumar slams TVK Vijay: ”அதிமுகவை சீண்ட வேண்டாம்.. தைரியம் இருக்கா விஜய்!” விளாசி தள்ளிய ஜெயக்குமார்
Jayakumar slams TVK Vijay: ”அதிமுகவை சீண்ட வேண்டாம்.. தைரியம் இருக்கா விஜய்!” விளாசி தள்ளிய ஜெயக்குமார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
TVK Vijay: விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
Rajya Sabha election : திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
Embed widget