கரூர் மாவட்டம் தோகமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடசேரி ஊராட்சி பள்ளப்பட்டியில் இன்று (22.01.2023) ஆர்.டி மலை ஊராட்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் மாடு முட்டி உயிரிழந்த சிவக்குமார் இல்லத்திற்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் நேரடியாக சென்று அவரது வாரிசுதாரமான பழனிச்சாமி, அஞ்சலை அவர்களிடம் ரூ.3 இலட்சத்திற்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான ஆணைகளை வழங்கினார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. இரா .மாணிக்கம் (குளித்தலை), திரு .ஆர். இளங்கோ (அரவக்குறிச்சி), திருமதி. க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோர் முன்னிலையில்வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. எம். லியாகத், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் திருமதி தேன்மொழி, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் திருமதி. புஷ்பா தேவி, குளித்தலை வட்டாட்சியர் திரு கலியமூர்த்தி மற்றும் அரச அலுவலக உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் கார்னராக வாகனங்கள் அதிக வெளிச்சத்துடன் அசுரவேகத்துடன் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது எனவே கனரக வாகனங்களை ரோந்து போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என இருசக்கர வாகன ஒட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கரூர், கோவை தேசிய நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இவ்வலையாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதில் கனரக வாகனங்களான லாரிகள், டிப்பர் லாரிகள், தனியார் பஸ்கள், கார், ஆம்னிகள், 100 கிலோமீட்டர் மேலாக அதிவேகத்தில் செல்கிறது. இந்த வாகனத்தில் அதிக வெளிச்சத்தை உமிழும் திறன் வாய்ந்த விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வெளிச்சத்தால் எதிரே டூவீலர்களில் வருபவர்கள் நிலை கொலையும் நிலை ஏற்படுகிறது. அதனால் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் நடக்கிறது. பெண்கள் குழந்தைகளுடன் வருபவர்கள் இந்த வெளிச்சத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுவாக விபத்துக்கு வேகம் காரணமாக இருந்தாலும் இரவில் அதிக வெளிச்சத்தால் தவறுகள் நடப்பதையும் மறுக்க முடியாது. மேலும் இருசக்கர வாகனங்களை கனரக வாகனங்கள் பொருட்படுத்துவது இல்லை. இதனால் எதிரே வரும்போது வெளிச்சத்தை குறைப்பது இல்லை. இதனால் தான் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாற வேண்டிய நிலை இருக்கிறது. என்று குறித்து டூவீலர் ஓட்டுபவர்கள் சிலர் கூறுகையில் அதிகமான வாகனங்கள் தற்போது கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றன. இதில் அதே திறன் வாய்ந்த விளக்குகளை முன் புறத்தில் பலர் பொருத்துகின்றனர். இவைகள் இரவில் எதிரி வாகனம் வாகனம் ஊட்டி வருபவர்களை தடுமாற செய்யும் வகையில் வருகின்றன. எனவே வாகன விதிகளின்படி எத்தனை திறன் விளக்குகளை பொருத்த வேண்டும் என அவர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கி கூறுவதுடன் செல்லும் வாகனங்களை தீவிர ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.