அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றலாம் என மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினர். அப்பொழுது ஒரு தரப்பினர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
மேலும் ஒரு சிலர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒரு தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரி முழக்கமிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற ஜூன் 23ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்