விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு வரும் ஆக. 26-ஆம் தேதி மைசூரிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கா்நாடக மாநிலம் மைசூரிலிருந்து வரும் ஆக. 26- ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06241) மறுநாள் காலை 10.50 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமாா்க்கத்தில் இந்த ரயில் (எண் 06242) திருநெல்வேலியிலிருந்து வரும் ஆக. 27 பிற்பகல் 3.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு மைசூரு சென்றடையும். இந்த ரயில் மைசூரிலிருந்து கேஎஸ்ஆா் பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காரபேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணிக்காக வார விடுமுறை நாட்களில் இயக்கி வந்த ராமேஸ்வரம் வரும் தினசரி ரயில் ஒரு வாரத்திற்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரமானது ஆன்மீக மற்றும் சுற்றுலா தளமாக இருப்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரயில்வே நிர்வாகம் சார்பில் ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் மதுரையிலிருந்து காலை, நண்பகல், இரவு என மூன்று வேளையிலும், திருச்சியில் இருந்து ஒரு வேளையிலும் தினசரி ரயில் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட்டு வந்தது . சத்திரக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் தண்டவாள பராமரிப்பு பணியின் காரணமாக, இந்த மாத தொடக்கத்தில் இருந்து வார விடுமுறை நாட்களில் மட்டும் இயக்கப்பட்டு மற்ற நாட்களில் மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது, ஆகஸ்ட் 27-ம் தேதி வரை முழுவதுமாக மதுரை, திருச்சி ஆகிய இரண்டு ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி ரயில் (06030) ஞாயிறு இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். மறுமர்க்கத்தில் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் (06029) ரயில் திங்கள் இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். சேரன்மாதேவி, கள்ளிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லுார், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனுார், கோவை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.