மின் தடை: திண்டுக்கல் முதல் நாமக்கல் வரை! உங்கள் பகுதியில் நாளை மின்சாரம் இருக்குமா? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
மின் வினியோகத்தை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணைமின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நாள்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின் வினியோகத்தை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணைமின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. அப்பணிகளின்போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் பகுதிகளில் நாளை ஒரு நாள் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின் தடை பகுதிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் எரியோடு, பாகநத்தம், மல்வார்பட்டி, தொட்டனம்பட்டி, பாளையம், ராமகிரி, கல்லிப்பட்டி, அணியாப்பூர், எம்.கயத்தார், கூடலூர் பகுதி, கருகால் பகுதி ஆகிய இடங்கள்
கரூர் மாவட்டத்தில் புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்.
தேனி மாவட்டத்தில் தேனி, உப்பார்பட்டி, குன்னுார், தோப்புப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் எலந்தைக்குளம், புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர் ஆகிய இடங்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் சமயசங்கிலி மற்றும் ராசிபுரம் துணை மின் நிலையத்தைச் சேர்ந்த மல்லூர் நகர், பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, பாரப்பட்டி, ஒன்டியூர், கீரனூர் வலசு, கீரனூர், நெ.3 கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்தகவுண்டம்பாளையம், அத்தனூர், பழந்தின்னிப்பட்டி, அவலாய்ப்பட்டி, நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, வெண்ணந்தூர், மின்னக்கல், ஜல்லூத்துப்பட்டி ஆகிய இடங்கள். அதேபோல, தேங்கல்பாளையம், கரடியானூர், அண்ணாமலைப்பட்டி, தாளம்பாளையம், உடுப்பத்தான்புதூர், சமயசங்கிலி, குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், சில்லாங்காடு, களியனூர், எம்.ஜி.ஆர். நகர், ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரகாரம், ஒட்டமெத்தை ஆகிய இடங்கள்.
மின் தடை நேரங்களில் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.























