தவெக கோட்டை ஆகிறது புதுக்கோட்டை? விஜய்யை பார்க்க நேரம் கேட்ட விஜயபாஸ்கர்!
அதிமுக-வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவதற்காக முதலமைச்சர் விஜய்யிடம் நேரம் கேட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு அதிமுக-வில் மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு தனது ஆதரவாளர்களுடன் மேற்கொண்ட ஆலோசனைக்கு பிறகு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்த அவர் அதிமுக-வில் இருந்தும் விலகினார்.
தவெக-வில் இணைவது உறுதி:
பதவியை ராஜினாமா செய்த அவர் திமுக-வில் இணைவாரா? தவெக-வில் இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் தவெக-வில் இணைவார் என்றே தகவல்கள் வெளியாகியது. இந்த சூழலில், அந்த தகவல் ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலமைச்சர் விஜய்யை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் தவெக-வில் இணைந்தனர். ஆனாலும், அவர்கள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையிலே இணைந்தனர். ஆனால், விஜயபாஸ்கர் மிகவும் செல்வாக்கான நபராக புதுக்கோட்டையில் திகழ்வதால் அவர் முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் முன்னிலையிலே இணைவார் என்று கருதப்படுகிறது.
ஆதரவாளர்கள் தீர்மானம்:
மேலும், தனது பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் விஜயபாஸ்கர் தவெக-வில் இணைய திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக, அவரது ஆதரவாளர்கள் புதுக்கோட்டையில் நடத்திய கூட்டத்தில் விஜயபாஸ்கர் தவெக-வில் இணைந்தால் அதற்கு முழு மனதுடன் ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும், நேரம் கேட்டு காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
விஜயபாஸ்கர் தவெக-வில் இணைந்தால் தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தவெக சார்பில் விராலிமலை தொகுதியில் அவர்கள் களமிறங்குவார் என்றே கருதப்படுகிறது. அவ்வாறு அவர் களமிறங்கி வெற்றி பெற்றால் அவருக்கு தவெக அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தவெக கோட்டை ஆகும் புதுக்கோட்டை:
விஜயபாஸ்கரின் அரசியல் அனுபவம் மற்றும் அவருடைய செல்வாக்கின் காரணமாக புதுக்கோட்டையில் தவெக-வின் வளர்ச்சி இனி வரும் காலங்களில் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றே அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் கணக்கு:
விஜயபாஸ்கர் அதிமுக-விற்காக கடந்த 4 சட்டமன்ற தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவர் அதிமுக-வில் இருந்து விலகி தவெக-வில் இணைவது அதிமுக-விற்கு மிகப்பெரிய இழப்பாகவே கருதப்படுகிறது.
அதேசமயம், தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் விஜயபாஸ்கரின் வருகையால் தவெக புதுக்கோட்டையில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் கருதப்படுகிறது.
மற்றொரு புறம் அனுபவமிகுந்த அதிமுக-வினர் தவெக-வில் இணைவதால் தொடக்கம் முதலே தவெக-வில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய வேதனையை உண்டாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Before You Go
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
ட்ரெண்டிங் செய்திகள்






















