சினிமாவை மிஞ்சிய காட்சி.. மணல் கொள்ளையர்களை மடக்கி பிடித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்... பரபரப்பு வீடியோ
கரூர் அருகே காவிரி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட மணல் லாரிகளை சிறை பிடித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

கரூர் அருகே காவிரி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட மணல் லாரிகளை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்சி நிர்வாகிகளுடன் சென்று சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், நெரூர் அடுத்துள்ள மல்லம்பாளையம் காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் திருட்டில் ஈடுபட்டதாக 5-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மற்றும் ஐந்து ஹிட்டாச்சி வாகனங்களை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்சி நிர்வாகிகளுடன் சென்று சிறை பிடித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர் மாவட்டம், நெரூர் அருகே காவிரி ஆற்றில் அரசு பர்மிட் செய்த வாரி போல செயல்படுகிறது. இந்த இடம் மட்டுமின்றி மேலும், மூன்று இடங்களில் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் 2 முதல் 3 கோடி வரை இதிலிருந்து வெளியே செல்கிறது. பலமுறை காவல்துறை, வருவாய்த்துறை, மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரிடமும் புகார் கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஒரு இடத்தில் மட்டும் 3 முதல் 4 கிலோ மீட்டர் வரை மணல் அள்ளப்பட்டுள்ளது.
MR Vijay Baskar | காவிரி ஆற்றில் மணல் திருட்டு களத்தில் இறங்கிய MR விஜயபாஸ்கர் விடிய விடிய லாரி வேட்டை https://t.co/wupaoCzH82 | #mrvijayabaskar #kaveririver #admk #dmk #tamilnews #abpnadu pic.twitter.com/3MKCytlijH
— ABP Nadu (@abpnadu) February 11, 2026
கடந்த ஒரு வருடமாக இந்த வேலை நடக்கிறது. காவல்துறைக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை. அனைத்து துறை அதிகாரிகள் உதவியுடன்தான் நடக்கிறது. காவல்துறை தினமும் எத்தனை மணல் லாரிகள் செல்கிறது என்பதை குறித்து வைத்துக் கொண்டு கமிஷன் பெறுகின்றனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஐ.ஜி-க்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.























