பிரதமர் குறித்த புத்தகத்தில் இளையராஜாவின் முன்னுரை விவகாரத்தில், இளையராஜாவின் கருத்துக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்டே ஆதரவளித்துள்ளார்.
பிரதமர் மோடியையும் அண்ணல் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா எழுதியிருந்த கருத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் மற்றும் ஆதரவு குரல்கள் எழுந்து வந்தன.
இந்நிலையில் இளையராஜாவிற்கு ஆதரவாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்டே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இசைஞானி திரு இளையராஜா அவர்கள். அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பாரத பிரதமா திரு நரேந்திரமோடி அவர்களை பேசியதில் எந்த தவறும் இல்லை. 1919-ல் காஷ்மீர் மாநிலத்திற்கு 370ஆவது சாசனத்தின் மூலம் தனி அந்தஸ்து கொடுப்பதற்காக திரு ஷேக்அப்துல்லா சாசன வரைவுக் குழுத்தலைவர் Dr.அம்பேத்கர் அவர்களை அணுகினார்.
இச்செயலைக் கண்டித்து, Dr.அம்பேத்தர் அவர்கள் அப்துல்லா அவர்களிடத்தில் "பிரதமர் பண்டித நேரு அவர்களுக்கு நீங்கள் தவறான யோசனைகளை கூறிக்கொண்டு வருகிறீர்கள். காஷ்மீருக்கு தனி அந்தஸ்து கொடுப்பதன் மூலமாக, அந்த மாநிலத்தில் எந்த தொழிற்சாலைகளும் வராது .வேலை வாய்ப்புகள் அறவே நீங்கி விடும் காஷ்மீர் மக்களின் வாழ்க்கை பாழாகி விடும் இந்திய நாட்டின் சட்ட அமைச்சராக இருக்கின்ற நான், 370வது சரத்தை அரசியல் சாசனத்தில் புகுந்துகின்ற தேச துரோக செயலுக்கு உடந்தையாக இருக்க மாட்டேன்" என திட்டவட்டமாக கூறினார்.
பிறகு, வேறு வழியில்லாமல், 17.04.1949 அன்று இந்த ராசன பிரிவை 306ஆ நீரு. N.G.அய்யங்காரால் சாசன சபையில் நிறைவேற்றப்பட்டது. ஆகவே 1949 Dr.அம்பேத்கர் அவர்கள் விரும்பியதை, 70 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றைய பாரத பிரதமர் 2019சம் ஆண்க நிறைவேற்றினார். இது தான் வரலாறு. இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கு Dr அம்பேத்கரை கொண்டாட எந்த தகுதியுமில்லை. 1946ல் மும்யை மாகாணத்திலிருந்து அரசியல் சாசன சபைக்கு Drஅம்பேத்கர் விடாமல் காங்கிரஸ் தடுத்தது. அன்றைய காங்கிரஸ் தலைவர் பண்டித நேரு அவர்களும், மும்பை மாகாணத்தின் முதல்வர் B.G.கேர் அவர்களும்தான். பிறகு, Dr.அம்பேத்கர் கிழக்கு வங்காளத்தின் ஜோகேந்திரநாத் மண்டல் அவர்களுடைய உதவியால் தான் சாசன சபைக்குள் வர முடிந்தது” எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்