சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசிநாளான இன்று நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றும் தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. அப்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு அச்சத்தால் சேலத்தில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டதற்கு தமிழ்நாடு அரசுதான் பொறுப்பு என்று குற்றம் சாட்டினார்.