மேலும் அறிய

Cv shanmugam: விசில் அரசியல் செல்லாது - சி.வி. சண்முகம் வார்னிங்!

சினிமா தியேட்டரில் வேண்டுமானால் விசில் அடிக்கலாம், பேருந்தை நிறுத்த விசில் அடிக்கலாம், ஆனால் அதிமுகவிற்கு ஓட்டு போடுவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது - சிவி சண்முகம்

விழுப்புரம்: சினிமா தியேட்டரில் வேண்டுமானால் விசில் அடிக்கலாம், பேருந்தை நிறுத்த விசில் அடிக்கலாம், ஆனால் அதிமுகவிற்கு ஓட்டு போடுவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது, பல ஜாம்பவான்களை பார்த்த இயக்கம் இந்த அதிமுக என திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி. வி சண்முகம் பேச்சு.

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திண்டிவனம் நகர் அதிமுக சார்பில் செயல் வீரர்கள் செயல் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மட்டன் பிரியாணியுடன் அறுசுவை விருந்து உபசரிக்கப்பட்டது, நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியதாவது:- 

2001 லிருந்து 5 சட்டமன்ற தேர்தலில் பார்த்துட்டோம் வானூர் சட்டமன்றத்தில் ஐந்து முறையும் நாம் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருக்கிறோம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதியிலும் ஐந்து முறை பெற்றுக்க வேண்டியது ஒரு முறை மற்றும்  அஜாக்கிரதையால் தோல்வி அடைந்துவிட்டோம், ஆனால் திண்டிவனம் கடுமையாக உள்ளது என்று மாயத் தோற்றம் உள்ளது, அப்படி இல்லை அது நம்முடைய எண்ணம், மக்கள் தயாராக உள்ளார்கள் நம்மளை வெற்றிபெற செய்ய, ஆனால் நாம் தான் அச்சபடுகிறோம்.

நம்பிக்கையோடு இருங்கள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் அமோகமாக வெற்றி பெறுவார், அதிமுகவில் சீண்டுவதற்கு ஆளில்லை, அந்த இயக்கம் பிளவுபட்டுஉள்ளது என திமுகவினர் கூறி வந்தனர். அதிமுக தற்போது வலுவான கூட்டணி அமைத்து உள்ளது, பாமக, புரட்சி பாரதம், உள்ளிட பல்வேறு கட்சிகளை சேர்ந்து வலுவான கூட்டணி அமைந்துள்ளது, இந்த கூட்டணி மூலம் பிரமாண்ட கூட்டத்தை நடத்தி காட்டி உள்ளது, ஆனால் திமுக இப்போது கூட்டணி கட்சிகளோடு மண்டாடி கொண்டுள்ளது, எங்களோடு இருங்கள் என்று பிச்சை எடுத்து கொண்டுள்ளது, அவர்களுடைய கூட்டணி சிதறி போய் கொண்டுள்ளது. எண்ணம் போல் தான் வழக்கை.


என்ன செய்தாலும் ஆட்சி மாற்றம் உறுதி, இது காலத்தின் கட்டாயம், 5 ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் என்ற விதியை மாற்றி அமைத்தவர் புரட்சி தலைவி அம்மா, 234 தொகுதிகளும் இரட்டை இலையில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற செய்தவர் அம்மா, சொல்லிய வாக்குறுதிகளை நிறைவேற்ற துப்பு இல்லை திறன் இல்லை, எங்கு பார்த்தாலும் ஊழல், ஊழல் மட்டும் இல்லை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு, கற்பழிப்பு செய்தவருக்கு ஆதரவாக அறிக்கை தரும் கட்சி தான் திமுக, 


மாணவர்கள் பையில் கஞ்சா உள்ளது, எப்படி வந்தது, கஞ்சவால் கொலை செய்கிறான், ஆனால் திமுக மக்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்து கொண்டு உள்ளார்கள், அவர்கள் அப்படியே இருக்கட்டும், ஆனால் நாம் நமது கடமையை சரியாக செய்ய வேண்டும், தேர்தல் களம் நமக்கு சாதகமாக மாறியுள்ளது. சாதாரண மக்கள் கூட நம்மை பார்து கூறுகிறார்கள், ஆட்சி மாற்றம் வேண்டும் நீங்கள் தான் வர வேண்டும் என கூறுகிறார்கள், நாம் ஜெயித்து விடுவோம் என்று அஜாக்கிரதையாக இருந்து விடு கூடாது, அப்படி இருந்தால் ஆமை முயல் கதை ஆகிவிடும், யார் வந்தாலும் கவலை படாதீர்கள், நமக்கு எப்போதும் எதிரியை திமுக தான், யார் வந்தாலும் வந்த வேகத்தில் சென்று விடுவார்கள், தமிழ்நாட்டு ஒளி கொடுத்துவிட்டோம் என்று கூறினார்.

கமலஹாசன் ஆனால் சொந்த தொகுதியிலேயே தோற்று அவர் இப்போது திமுகவுடன் பிச்சை எடுத்து கொண்டுள்ளார்,  சினிமா தியேட்டரில் வேண்டுமானால் விசில் அடிக்கலாம், பேருந்தை நிறுத்த விசில் அடிக்கலாம், ஆனால் அதிமுகவிற்கு ஓட்டு போடுவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது, பல ஜாம்பவான்களை பார்த்த இயக்கம் இந்த அதிமுக, பதவி சுகம் அனுபவித்தவர்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம் ஆனால் அதிமுக தொண்டன் எங்கும் போக மாட்டான், ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒன்று முளைக்கும் அதை பற்றி நாம் கவலைப்பட கூடாது, தீய சக்தி தமிழகத்தில் இருந்து துரத்தி அடிக்க வேண்டும், அதற்காக உருவாக்கப்பட்ட கட்சி தான் அதிமுக, சொல்லப்படுகிறது எனவே நீங்கள் அனைவரும் தலைமை கழகம் செல்வதை கேட்டு செயல்பட வேண்டும், தேர்தல் மிக விரைவில் அறிவிக்க உள்ளார்கள், 

தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரும் மீண்டும் அம்மாவுடைய ஆட்சி வரவேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும், இளைஞர்கள் அதிகம் செயல்பட வேண்டும், உங்களது நண்பர்களை இயக்கத்தில் இணைக்க வேண்டும், இயக்கம் உங்களை நம்பி தான் உள்ளது, நீங்கள் தான் செயல்படவேண்டும் எல்லாம் நீங்கள்தான், அதற்கான தகுதிகளை நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும், அப்படி வந்தவர்கள் தான் நாங்கள். நம்பிக்கையோடு செயல்படுங்கள் எதிர்காலம் உங்கள் கையில், திண்டிவனம் தொகுதி வேட்பாளர் யார் வேணுமானாலும் இருக்கலாம், அவரை வெற்றி பெற செய்வது நம்முடைய பொறுப்பு என்று கூறி முடித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தமிழக அரசு அதிரடி: செஞ்சியில் ₹85 கோடியில் நான்கு வழிச்சாலை! பணியை தொடங்கி வைத்த ஆட்சியர்!
தமிழக அரசு அதிரடி: செஞ்சியில் ₹85 கோடியில் நான்கு வழிச்சாலை! பணியை தொடங்கி வைத்த ஆட்சியர்!
RAIN ALERT : மீண்டும் மழை.! அடுத்த 7 நாள் தமிழக வானிலை நிலவரம் என்ன.? அலர்ட் விடுத்த வானிலை மையம்
மீண்டும் மழை.! அடுத்த 7 நாள் தமிழக வானிலை நிலவரம் என்ன.? அலர்ட் விடுத்த வானிலை மையம்
தமிழ் மீது மோடி வைத்திருக்கும் மரியாதையே தனி..! ஆனா.. மத்திய அரசு இப்படி செய்யலாமா.? சீறிய இபிஎஸ்
தமிழ் மீது மோடி வைத்திருக்கும் மரியாதையே தனி..! ஆனா.. மத்திய அரசு இப்படி செய்யலாமா.? சீறிய இபிஎஸ்
காஞ்சிபுரம் காவல் நிலையம்: மரங்களை நேசிக்கும் புதிய கட்டடம்! காவலர்களுக்குக் கிடைத்த கௌரவம்!
காஞ்சிபுரம் காவல் நிலையம்: மரங்களை நேசிக்கும் புதிய கட்டடம்! காவலர்களுக்குக் கிடைத்த கௌரவம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
TVK Vijay: விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
Rajya Sabha election : திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
TVK Thanjavur Meeting: மனைவி சங்கீதாவை வைத்து விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தொண்டர்கள்!
TVK Thanjavur Meeting: மனைவி சங்கீதாவை வைத்து விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தொண்டர்கள்!
TVK Vijay: ’’கரூர் டூ ஜனநாயகன்; என்னைச் சுற்றி இத்தனை விஷயங்களில் சதி நடக்கிறது’’- மவுனம் கலைத்த விஜய்!
TVK Vijay: ’’கரூர் டூ ஜனநாயகன்; என்னைச் சுற்றி இத்தனை விஷயங்களில் சதி நடக்கிறது’’- மவுனம் கலைத்த விஜய்!
சுயமரியாதையை சீண்டிப் பார்ப்பதா... தமிழர்களின் சூட்டை பாஜக உணர வேண்டிருக்கும்- எச்சரிக்கும் ஸ்டாலின்
சுயமரியாதையை சீண்டிப் பார்ப்பதா... தமிழர்களின் சூட்டை பாஜக உணர வேண்டிருக்கும்- எச்சரிக்கும் ஸ்டாலின்
TVK Vijay Election Promise: பயிர்க்கடன் தள்ளுபடி முதல் படிப்பு செலவு வரை; விஜய் அள்ளிக்கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன.?
பயிர்க்கடன் தள்ளுபடி முதல் படிப்பு செலவு வரை; விஜய் அள்ளிக்கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன.?
TVK Vijay Election Promise: மருத்துவம், பொறியியல் வரை இலவச கல்வி முதல் கடன் தள்ளுபடி வரை- விஜய்யின் அதிரடி வாக்குறுதிகள்!
TVK Vijay Election Promise: மருத்துவம், பொறியியல் வரை இலவச கல்வி முதல் கடன் தள்ளுபடி வரை- விஜய்யின் அதிரடி வாக்குறுதிகள்!
Embed widget