Ford in Chennai: "சென்னை மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலை மீண்டும் தனது உற்பத்தியை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது"

Continues below advertisement


சென்னை ஃபோர்டு கார் உற்பத்தி தொழிற்சாலை


இந்தியாவில் ஃபோர்டு கார் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சென்னை மற்றும் குஜராத் ஆகிய இரண்டு இடங்களில் இரண்டு தொழிற்சாலைகளை அமைத்து கார் உற்பத்தி செய்து வந்தது. இதன் மூலம் இரண்டு தொழிற்சாலைகளிலும் பல ஆயிரக்கணக்கான, வேலைவாய்ப்புகள் உருவாகி இருந்தன. பல்வேறு காரணங்களால், இந்தியாவில் ஃபோர்டு கார்களின் விற்பனை படிப்படியாக சரியத் தொடங்கியது. இதனால் தொழிற்சாலையில் கார் உற்பத்தியை படிப்படியாக அந்த நிறுவனம் குறைத்து வந்தது. இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் தொடர் நஷ்டம் ஏற்பட்டதால், இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. 


குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு இடங்களில் செயல்பட்டு வந்த தொழிற்சாலையை மூடியது. மூடப்பட்ட குஜராத் தொழிற்சாலையை, டாடா குழுமம் ரூ.725 கோடி ரூபாய்க்கு வாங்கியது. சென்னை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கும் செட்டில்மெண்ட் அறிவித்தது. பெரும்பாலான ஊழியர்கள் செட்டில்மெண்ட் தொகையை பெற்ற நிலையில், சில ஊழியர்கள் அதைப் பெற்றுக்கொள்ளாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.


தமிழக அரசின் முயற்சி 


ஃபோர்டு தொழிற்சாலை இந்தியாவிலிருந்து வெளியேறியது மிகப்பெரிய, அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக சென்னைற தொழிற்சாலையை பல்வேறு நிறுவனங்கள் வாங்க முயற்சி மேற்கொண்டன. இறுதியில் தமிழ்நாடு அரசு ஃபோர்டு நிறுவனத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. தமிழ்நாடு அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஃபோர்டு தொழிற்சாலை மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நேரடியாக ஃபோர்டு நிறுவன ஊழியர்களை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.


மீண்டும் தொடக்கம்


இந்தநிலையில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் பணியில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முன்னிலையில், ரூ.3250 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனால் விரைவில் ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த முறை கார்களை தயாரிப்பதற்கு பதில் கார் இஞ்சின்களை மட்டும் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI