கரூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

கரூர் மாவட்டம் வாங்கல் அருகே சின்ன காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(62). இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜானகி (60). இந்த தம்பதிக்கு சுகுணா மற்றும் கண்ணன் என்ற மகனும் உள்ளனர். சுகுணாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகள் சுகுணா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிள்ளைகளுடன் வந்துள்ளார். 

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்

இந்நிலையில் கார் டாக்ஸி புக் செய்து சின்ன காளிபாளையம் பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு வந்துள்ளார். அதற்கு பிறகு இவர்கள் குறித்த எந்த தகவலும் இல்லாத நிலையில் பக்கத்துடன் தோட்டக்கார் கிணற்றை பார்த்த போது 5 பேர் சடலமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.  இந்த சம்பவம் தொடர்பாக வாங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Continues below advertisement

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. உடலில் 5 பேரும் ஒருவருக்கு ஒருவர் புடவையால் கட்டிக்கொண்டு தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.