ஃபெஞ்சல் புயல் எங்கே?
வங்க கடலில் இலங்கைக்கு கிழக்கேயும் , சென்னைக்கு தென்கிழக்கேயும் உருவாகிய புயலானது, நேற்று இரவு 10.30 முதல் 11.30 வரை கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்தது.
இதையடுத்து, புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் நுழைந்த புயலானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து திருவண்ணாமலையில் தற்போது நகர்ந்துள்ளது.
சென்றாலும் கனமழை:
இது, மேற்கு மற்றும் வடமேற்காக கடந்து , நாளைய தினம் ( நவம்பர் 2 ) காலையில் கர்நாடக மாநிலத்திற்கு நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நாளை மறுநாள் ( நவம்பர் 3 ) அரபிக் கடலில் நுழையும் என கணிக்கப்படுகிறது. அப்பொழுது, கிழக்கு புறத்தில் உள்ள வங்க கடலில் மேற்பரப்பில் உள்ள ஈரக்காற்றை ஈர்த்து , சில மணிநேரங்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தனியார் வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் , தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்ய கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த 6 தினங்களுக்கு வானிலை:
தமிழ்நாட்டில் ஏழு தினங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு
நாளை : 02-12-2024:
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், 'திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள்: 03-12-2024:
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
04-12-2024:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
05-12-2024 முதல் 07-12-2024 :
வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.