வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயலானது, தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து 100 கி.மீ தென்கிழக்கே இருப்பதாக தென்மண்டல வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


மேலும், இந்த புயலானது 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும், காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  புயல் இன்று மாலை கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும், நகரும் பாதையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று காலை 8.30 மணி வரையிலிருந்து மதியம் 1 மணி வரையிலான கால அளவில் பெய்த மழை அளவானது,சென்னையை பொறுத்தமட்டில்


எண்ணூர்- 13 செ.மீ


மீனம்பாக்கம் : 10.2 செ.மீ
கொளப்பாக்கம் : 10.25 செ.மீ
நுங்கம்பாக்கம் : 9.70 செ.மீ
நந்தனம் : 8.20 செ.மீ
பல இடங்களில் 7.0 செ.மீ க்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது



30-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர். அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.



01-12-2024 தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.