கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், விவசாயிகளிடம் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு நேரடியாக ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் பதில் தெரிவித்தார்கள்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பதில் அளித்து தெரிவித்ததாவது: நடப்பாண்டு நெல் கொள்முதல் நிலையங்கள் கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யும் பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது. மேலும் கரூர் மாவட்டத்தில் தரமாக விளையும் நெல்களை ஆலைகளில் மூலம் அரசியல் உற்பத்தி செய்து கரூர் மாவட்ட நியாய விலை கடைகள் மூலம் உள்ளூர் மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் முதல் முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நம் மாவட்டத்தில் விளையும் நெல் மூலம் உற்பத்தியாகும் அரிசிகளை நமது மாவட்ட மக்களே பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் உற்பத்தியாகும் நெற்களை வணிகர்களுக்கு விற்காமல் அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 15 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுடன் வேளாண்மை துறை, நுகர்ப்பொருள் வாணிப கழகம், வருவாய்த்துறை குறு வட்டார அளவில் விவசாயிகளுடன் நெல் கொள்முதல் செய்வது தொடர்பான கூட்டம் நடத்தி அதன்படி அட்டவணையின்படி அறுவடை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். உழவர் சந்தைகளில் விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் பொருள்களை முழுமையாக விற்பனை செய்வதற்கு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், வியாபாரிகள் விற்பனை செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாயனூர் கதவணை கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு கணக்கெடுக்கும் பணி முடிந்தவுடன் அவர்களுக்கான உரிய நஷ்டஈடு தொகையினை விரைவில் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.
"மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அவர்கள் சட்டப் பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான அறிவிப்பு
"மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அவர்கள் சட்டப் பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் (SUP) தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு “மஞ்சப்பை விருதுகள்” வழங்கப்படும் என அறிவித்தார்.
இதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பபைகளுக்கு (Plastic Carry bags) மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள்/ கல்லூரிகள்/ வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் (collrkar@nic.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: 1) விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர் / நிறுவனத்தலைவரால் முறையாக
கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும்.
2) கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு (CD) பிரதிகள் இரண்டினை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.