சென்னை தரமணி ஐஐடி வளாகத்தில் கனவு தமிழ்நாடு என்ற அமைப்பின் சார்பில் பொருளாதார வளர்ச்சியில் "தமிழகத்தின் ஒரு டிரில்லியன் டாலர் கனவு" என்ற தலைப்பில் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, விடுதலை சிறுத்தை காட்சிகளின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினார். 


விசிக தலைவர் திருமாவளவன் உரை :




"தமிழகத்தின் ஒரு டிரில்லியன் டாலர் கனவு" நிகழ்வில் பங்கேற்று பேசிய விசிக தலைவர் திருமாவளவன்,  இந்திய சமூகத்தில் சமனற்ற நிலை அதிகமாக உள்ளது. பெரும்பாலான சமூகத்தில் அடிப்படை வசதிகள் கூட பெற முடியாத நிலை உள்ளது. சமனற்ற தன்மை சமூக நீதியின் மூலமே சரி செய்யப்படும். மேலும், சமனற்ற சமூக கட்டமைப்பில் ஒருவன் கல்வி பெறுவது, வேலை பெறுவது போன்றவை தனி நபர் கட்டமைப்பயே வலுப்பெறும். அனைத்து தளங்களிலும் சமூக நீதி தொடர்பான புரிதல் தேவை, புரிதல் இல்லாவிட்டால் முழுமையான வளர்ச்சி இருக்காது. சமூக நீதியை ஒருங்கிணைந்த வளர்ச்சியோடு பொருத்திப்பார்க்க வேண்டும். எல்லா வாய்ப்புகளும் ஒரு குறிப்பிட்ட மொழியை பேசுபவர்களுக்கு, குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்களுக்கே வழங்கினால் சமூக நீதி வெற்றி பெறாது. சிறுபான்மையினர், கவனிக்கப்படாதவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்புவழங்க வேண்டும்.


தமிழன் என கூறி கொள்வது முற்போக்கானது அல்ல அடையாளம்தான். மொழி உரிமை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் உணர்வை பெற்றுள்ளேன் என்பது தான் மொழியுணர்வு. இன தூய்மைவாதம் பேசி ஒருவன் தமிழன் என கூறிக்கொள்வது முற்போக்கு கிடையாது. இன உரிமை பேசுவது தவறல்ல, இன தூய்மைவாதம் பேசுவது தவறு என கூறினார். இந்தியா ஒரே தேசமாக இல்லை என்பது பாஜகவின் எண்ணம். ஒரே தேசம் என்றால், ஒரே ஆட்சி, ஒரே மொழி, ஒரே மாதிரியான கல்விதான் இருக்கவேண்டும் என நினைக்கிறது. சமூக நீதி என்பது எழை எளிய மக்களுக்கு வழங்க கூடிய சலுகை, சாதிய அடிப்படையிலான இடபங்கீடாக பார்க்ககூடாது. எல்லாருக்கும் சமமான வாய்ப்பு வழங்குவதே ஒரு டிரில்லியன் டாலர் கனவு நோக்கி செல்ல முடியும்.


பெண் கல்வி, பெண்களுக்காக அதிகாரம் என்பது முக்கியமானது; அதுதான் சமூகநீதி பரவலை நோக்கி செல்ல முடியும். பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு கோரிக்கைக்கு 33 வருடமாக போராடி கொண்டிருக்கிறோம் என திருமாவளவன் பேசினார்.


காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உரை:




அதனை தொடர்ந்து பேசிய ஜோதிமணி, ”மத்திய அரசு மாநில அரசை கட்டுப்படுத்துவதன் மூலம் மாநில சுயாட்சி பாதிக்கப்படுகிறது. மாநில அரசு உள்ளாட்சி அமைப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் உள்ளாட்சி சுயாட்சி பாதிக்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து மக்கள் தங்களது சுயாட்சியை நிலைநிறுத்திக்கொள்ள கிராம சபை மூலம் போராட வேண்டியுள்ளது என தெரிவித்தார். மேலும், நாட்டின் ஒட்டுமொத்த சுகாதரத்தையும் மத்திய அரசு கட்டுப்படுத்துவதால் நாடு பிணக்காடாக உள்ளது. தன்னாட்சி என்பது மாநில சுயாட்சியோடு முடிந்துவிடக்கூடாது; உள்ளாட்சி அமைப்புகள் வரை செல்லவேண்டும். மக்களுக்கான சுயாட்சி மட்டுமே வளர்ச்சியை நோக்கி கொண்டுசெல்ல முடியும். மக்களுக்கான அதிகார பரவலாக்கம் மூலமாகவே தமிழகத்தின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் டாலர் கனவை நோக்கி செல்ல முடியும்.


திமுக எம்.பி கனிமொழி உரை:


பின்னர் இறுதியாக உறையாற்றினார் திமுக எம்.பி கனிமொழி. ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு உள்ள அதிகாரங்களை பறிக்கும் சூழல்தான் தற்போது உள்ளது. ஜாதியை எதிர்த்து பேசும் சூழலே குறைந்து வருகிறது; தற்போது உள்ள அரசியல் தடத்தில் ஜாதி குறித்தே பேச முடியவில்லை. ஜாதி, மதம், அறிவியல் சார்ந்த கருத்துகளை எதிர்த்து பேச முடிவதில்லை என்றும் ஒரு கருத்திற்கு எதிர்கருத்து வைக்கமுடியாத சூழலில் மத்திய அரசு செயல்படுகிறது என குற்றம்சாட்டினார் கனிமொழி. சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட பணம் தமிழ், மலையாளம், கன்னடம், ஆந்திரா, ஒரியா ஆகிய மொழிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தை விட 22% அதிகம். அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும் ஒரு சட்டம் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு. ஆனால்,  இதுவரை நிறைவேற்ற முடியாத சட்டமும் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடுதான். பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை ஏன் நிறைவேற்றவில்லை என கேள்வியெழுப்பினார்.


63% பெண்கள் விவசாய தொழிலாளர்களாக உள்ளனர். ஆனால் அவர்களுக்கான அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இதுவரை எவ்வித அங்கீகாரமும் கிடைக்கவில்லை. மனிதர்கள் மரியாதையுடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்கவேண்டும். இயற்கையை மனிதர்கள் அழித்த காரணத்தால் இயற்கை தற்போது மனிதர்களை அழிக்கும் சூழல் உள்ளது. அதனால் தான் கொரோனா போன்ற பெருந்தொற்று உலகையே ஆட்டி படைத்து வருகிறது என பேசினார்.


மாணவர்கள் அரசியல் பேசக்கூடாது என்ற நிலையை உருவாக்கியத் தவறு. மாணவர்கள் அரசியல் பேச கூடாது என கூறும் நிலையை மாற்றவேண்டும். சென்னை ஐஐடியில் பெரியார், அம்பேத்கர் படிப்பகத்திற்கு தடை விதித்த காரணத்தால்தான் இன்று நாடு முழுவது பெரியார் அம்பேத்கர் படிப்பகம் உள்ளது” என்று பேசினார்.