அரசுப் பள்ளிகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பள்ளிகளில் ஆய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்பட்டதாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அதுதொடர்பாக பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், முதன்மைக் கல்வி மற்றும் மாவட்டக்கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி பள்ளிக்கல்வி ஆணையருக்கு அறிக்கை கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Children of Women Prisoners in Tamilnadu : சிறையில் தாய்: குழந்தைகள் நிலை என்ன? அறிக்கை கேட்கும் பள்ளிக்கல்வித் துறை!


இந்த வழக்கின்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி ஆணையர் கூறினார்.




நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் , இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக முதல் அலையில் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. ஊரடங்கு, கடைகள் திறப்பிற்கு கட்டுப்பாடுகள், மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது கொரோனா பரவல் நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டு போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டாலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.


இந்நிலையில், தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 31ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கெனவே உள்ள செயல்பாடுகளுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் செயல்படுவதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. நிர்வாகப் பணிகள் தொய்வின்றி நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரியவும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், தொழிற் பயிற்சி நிலையங்கள், தட்டச்சு, சுருக்கெழுத்து நிலையங்கள் 50% மாணவர்களுடன் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


வரும் 19ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - பள்ளிக்கல்வித்துறை