நில மோசடி வழக்கில் ஜாமினில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Continues below advertisement

கரூர், லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜாமினில் வெளிவந்த பிறகு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

Continues below advertisement

நிலமோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கடந்த 16-ஆம் தேதி கேரளா மாநிலம், திருச்சூரில் கைது செய்யப்பட்டு கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 

 

இந்த நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் முன்ஜாமின் கேட்டு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பரத்குமார் நேற்று நள்ளிரவு முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உட்பட மூவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

 

அதைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்துவெளியே வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.