ரோடு மாவட்டங்களில் நாளை திங்கட்கிழமை (11.08.2025) மின்வாரியம் சார்பில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

Continues below advertisement

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள்
தமிழ்நாட்டில் மின்வாரியம் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதற்காக, குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு நாள் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்படும். பொதுவாக, மின்தடை விவரம் முன்கூட்டியே அறிவிக்கப்படும்.

எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?
பராமரிப்பு பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த நேரத்தில், சிறிய பழுதுகளை சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

Continues below advertisement

நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

மேட்டுக்கடை:

மேல்தண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம்.

சூரியம்பாளையம்

சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேராடு, மாமரத்துப்பால்.

பெருந்துறை:

தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கோவுண்டாச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நாசவளர் காலனி, பெருந்துறை ஆர்.

பொது மக்கள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.