கடந்த 15 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 




 


மார்ச் 15ஆம் தேதி இதய பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு 20ஆம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  22 நாள் சிகிச்சைக்கு பின் இன்று அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடந்த 10ஆம் தேதி தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


அதன்பின் டெல்லிக்கு விமானத்தில் சென்று திரும்பிய நிலையில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், ஏற்கனவே 2 முறை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர் என்பதாலும்  மார்ச் 15ஆம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மார்ச் 20ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.


மார்ச் 22 ஆம் தேதி தீவிர சிகிச்சைபிரிவில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 


அதேசமயம் இதய பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் இன்று 22 நாட்களுக்கு பின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.