Erode East By Election LIVE : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பிப். 24ல் முதலமைச்சர் பிரச்சாரம்?

Erode East By Election News LIVE Updates: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்த அப்டேட்டுகளை ஏபிபி நாடு தளத்தில் உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 07 Feb 2023 08:49 PM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பிப். 24ல் முதலமைச்சர் பிரச்சாரம்?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிப். 24ல் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை : தினகரன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் போட்டியிடவில்லை. குக்கர் சின்னம் ஒதுக்கப்படாத காரணத்தால் இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை - தினகரன் 

பரப்புரையை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் தென்னரசு..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு பரப்புரையை தொடங்கினார். 

அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அங்கீகாரம்

அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

தேர்தல் ஆணையத்தில் சமர்பிப்பு..!

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பக் கடிதங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சமர்பித்தார். 

டெல்லி செல்கிறார் தமிழ்மகன் உசேன்..!

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அனுப்பிய கடித்தத்துடன் நாளை அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லி செல்கிறார். 

அதிமுகவுக்கு ஆதரவு - பாரிவேந்தர் எம்.பி

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக தோழமைக் கட்சியான அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். 

ஓபிஎஸ் ஆலோசனை..!

தென்னரசுவை ஆதரிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஓ. பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

பன்னீர் செல்வம் தனது வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் - அண்ணாமலை

ஈரோடு கிழக்கில் வெற்றி பெற ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

பாஜக போட்டியில்லை..!

இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

அதிமுக வேட்பாளர் ”தென்னரசு” தான் என அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைதேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு தான் என, அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார். 

வீடு வீடாக அமைச்சர் மா.சு பிரச்சாரம்..!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம்,ஆ. சுப்பிரமணியம் ஈரோடு கிழக்கில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

வேட்பாளரை வாபஸ் பெறுகிறார் ஓபிஎஸ்?

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பொதுக்குழு மூலம் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வேட்பாளரை திரும்பப் பெறுவது குறித்து ஓபிஎஸ் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இதுவரை 36 பேர் வேட்புமனு..!

இடைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

ஒப்புதல் படிவம் விநியோகிக்கும் அதிமுக..!

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து பொதுகுழு உறுப்பினர்களிடத்தில் வேட்பாளர் ஒப்புதல் படிவத்தினை விநியோகிக்கும் பணியை அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் துவங்கப்பட்டுள்ளது. 

அதிமுக வேட்பாளர் - தென்னரசு..!

அதிமுகவின் வேட்பாளராக தென்னரசுவை அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

இடைத்தேர்தலை நியாயமாக நடத்த அதிமுக கோரிக்கை..!

இடைத்தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என அதிமுகவின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார். 

புதிய வாக்காளர் அட்டை தயார்..!

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய  வாக்காளர் அடையாள அட்டை தயார் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.  

தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு..!

பொதுக்குழு வழக்கு தொடர்பான எடப்பாடி பழனிச்சாமியின் இடையீட்டு மனு குறித்து தேர்தல் ஆணையம் மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 118 பேர் கொண்ட பணிக்குழுவை அமைத்தது ஓபிஎஸ் அணி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான 118 பேர் கொண்ட பணிக்குழுவை அமைத்தது ஓபிஎஸ் அணி. பாஜக போட்டியிடாவிட்டால் மட்டுமே போட்டியிடவுள்ளதாகவும், ஓபிஎஸ் அணி தெரிவித்துள்ளது. 


வைத்திலிங்கம் தலைமையில் 118 பேர் கொண்ட பணிக்குழுவை அமைத்தார் ஓ.பி.எஸ். 117 பேர் கொண்ட பணிக்குழுவை இபிஎஸ் அமைத்தது குறிப்பிடத்தக்கது. 

118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு - ஓ.பி.எஸ்

இடைத்தேர்தலில் ஓ. பன்னீர் செல்வம் அணி சார்பாக 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளார் ஓ. பன்னீர் செல்வம். மேலும் ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் இருந்து பாஜக போட்டியிடாவிட்டால் மட்டுதான் போட்டியிடுவோம் எனவும் அறிவித்துள்ளனர். 

இடைத்தேர்தல் - ஈரோட்டில் திமுக ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பு தொடர்பாக ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைந்து வாக்கு சேகரிப்பு குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

Erode East By Election LIVE: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர் அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் அறிவிப்பு - அக்கட்சியின் சார்பில் ஏ.எம்.சிவபிரசாத் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு 

அதிமுக வேட்பாளர் தென்னரசு..?

அதிமுகவின் வேட்பாளராக முன்னாள் எம் எல் ஏ தென்னரசு அறிவிக்கப்பட வாய்ப்பு. நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எடப்பாடி பழனிச்சாமி 7 மணி நேரம் ஆலோசனை..!

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இடைக்கால ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோச்னையை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடத்தினார். 7 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பங்க்கேற்றனர்.  

இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாட்டுக்கு ஐஜேகே ஆதரவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாட்டுக்கு ஐஜேகே ஆதரவு தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- காங்கிரஸ் பணிக்குழு அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் பணிக்குழுவை, மாநில தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். மோகன் குமாரமங்கலம் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி சமுண்கத்துடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி சண்முகத்தை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆதரவு கோரினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பாளர் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆலோசனை  

போட்டியிடுவது குறித்து நாளை முடிவு - சரத்குமார்..!

இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாளை முடுவு எடுக்கப்படும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். 

நாங்கள் போட்டியிடுகிறோம் - ஓபிஎஸ்..!

நாங்கள் போட்டியிடுகிறோம் என்றும் விரைவில் வேட்பாளரை அறிவிப்போம் என்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின்னர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். 

இளங்கோவன் வெற்றிக்கு அணிலாக இருப்பேன் - மக்கள் ஜி. ராஜன்..!

ஈ.வி.கே.எஸ்  இளங்கோவன் வெற்றிக்கு அணிலாக இருப்பேன் என ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்ட ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி. ராஜன் பேட்டியளித்துள்ளார். 

அமமுகவினர் பிரச்சாரம்...!

இடைத்தேர்தலில் அமமுகவிற்கு ஆதரவு கேட்டு ஈரோடு மாவட்ட அமமுகவினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

எடப்பாடி கோரிக்கை நிராகரிப்பு..!

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தரக்கோரி புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகத்தினை சந்தித்து ஆதரவு கேட்ட நிலையில், பாஜக நிலைப்பாடு தான் எங்களின் நிலைப்பாடு என ஈபிஎஸ் அணியின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். 

கமல் நாளை ஆலோசனை..!

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாளை பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். 

காங்கிரஸ்க்கு மநீம ஆதரவு - கமல்..!

இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு..!

தேமுதிகவின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த், தேமுதிக வேட்பாளராக களமிறங்குவார் என தேமுதிக பொருளாளார் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

தேமுதிக தனித்து போட்டி..!

தேமுதிக தனித்து போட்டி; மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் பிரேமலதா அறிவிப்பு. 

Erode East By Election LIVE: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - கமலிடம் ஆதரவு கேட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு தருமாறு காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் கோரிக்கை - நிர்வாகிகளுடன் பேசி கமல் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புவதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி 

Erode East By Election LIVE: இடைத்தேர்தல் நிலைப்பாடு என்ன..? கமல் ஆலோசனை..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதா? என கமல் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்க முடியாது - அண்ணாமலை பேட்டி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்க முடியாது என திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறினார். 


ஈவிகேஎஸ் அவர்களுக்கு மற்ற கட்சியை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்பினார். பண பலம்,  மன பலம் என அனைத்தையும் எதிர்கொள்ள கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தேமுதிக ஆலோசனை 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜனவரி 26ஆம் தேதி வரை விருப்பமனு பெறப்படும் என அதிமுக அறிவிப்பு..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள வேட்பாளர்களின் விருப்பமனு இன்று முதல் ஜனவரி 26ஆம் தேதி வரை பெறப்படும் என இடைக்கால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு  வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை..

கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இன்று சென்னையில் ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. 

மூடப்படாத கழிவுநீர் தொட்டி - 6 வயது சிறுவன் பலி.. செங்கல்பட்டில் அரங்கேறிய சோகம்..

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே வெங்கடாபுரம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் மூடப்படாத கழிவுநீர் தொட்டியில் 6 வயது சிறுவன் விழுந்து உயிரிழப்பு..


வெங்கடாபுரம் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் குடிநீர் பிடிக்க மகனுடன் மணிகண்டன் சென்றுள்ளார். தண்ணீர் பிடித்த பின் மகனை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் நேற்று இரவு 9 மணி போல் கழிவுநீர் தொட்டியில் பார்த்தப்போது சிறுவன் தவறி விழுந்தது தெரிய வந்துள்ளது. விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Erode East By Election LIVE: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: விரைவில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - எதிரிகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதை விட தேர்தல் களத்தில் சந்திப்பதே சரியானது எனவும் கருத்து தெரிவித்துள்ளார். 

ஓரிரு நாளில் வேட்பாளரை அறிவிப்போம் - தினேஷ் குண்டு ராவ்..!

இன்னும் ஓரிரு நாளில் காங்கிரஸின்  ஈரோடு கிழக்கு வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார். 

திமுகவின் ’பி’ டீம் தான் ஓபிஎஸ்..!

திமுகவின் ’பி’ டீமாக ஓ. பன்னீர் செல்வம் செயல்படுகிறார் என ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

தேவநாதனுடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு..!

இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் தேவநாதனுடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர். 

 ஜனவரி 29ஆம் தேதி வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் - சீமான்..!

 ஜனவரி 29ஆம் தேதி வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

பொதுமக்களிடம் குறைகளைக் கேட்ட முதல்வர்..!

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள பொது மக்களைச் சந்தித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறைகளைக் கேட்டார். 

காங்கிரஸ் வேட்பாளர் யார் - ஆலோசனையில் காங்கிரஸ்..!

இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் நோக்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

காங்கிரஸ் வேட்பாளர் யார் - ஆலோசனையில் காங்கிரஸ்..!

இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் நோக்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Erode East By Election LIVE: மரியாதை நிமித்தமாக அண்ணாமலையை சந்தித்தேன்.. பன்னீர்செல்வம் பேட்டி...!

மரியாதை நிமித்தமாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தேன் என பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

வழக்குகளை விரைந்து விசாரிக்கும்படி உத்தரவிட முடியாது

மாவட்ட நீதிமன்றங்களின் விசாரிக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்கும்படி உத்தரவிட முடியாது.கீழமை நீதிமன்றங்களில் விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே உத்தரவு பிறப்பிக்க முடியும் - நீதிபதி 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அண்ணாமலையுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

பா.ஜ.க.வின் நிலைப்பாடு குறித்து அண்ணாமலை அறிவிப்பார் - ஜெயக்குமார்

பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை அண்ணாமலை தெரிவிப்பார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இரட்டை இலைக்கு ஆதரவு - ஜான் பாண்டியன்..!

இரட்டை இலை சின்னம் வைத்திருப்பவருக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக தமமுக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

ஆதரவு கோரி ஜான் பாண்டியனைச் சந்தித்த ஈபிஎஸ் அணியினர்..!

ஈரோடு கிழக்கில் ஆதரவு அளிக்க வேண்டி ஈபிஎஸ் அணியினர் தமமுக கட்சித் தலைவர் ஜான் பாண்டியனை ஈபிஎஸ் அணியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர். 

நான் போட்டியிடவில்லை - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை என ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

நாங்க போட்டியிடவில்லை - பாமக..!

இடைத்தேர்தலில் போட்டியிடவும் இல்லை யாருக்கும் ஆதரவு அளிக்கவும் இல்லை என பாமக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

கட்சி பெயரை பயன்படுத்த நீதிமன்றத்தினை நாடும் இபிஎஸ்..!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி பெயர் பயன்படுத்த தற்காலிக அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தை நாட எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரோட்டில் முகாமிட்ட அமைச்சர்கள்...!

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ்க்கு ஆதராவாக திமுக அமைச்சர்களான முத்துசாமி மற்றும் கே.என். வீடு வீடாகச் சென்று பரப்புரை நடத்தி வருகின்றனர்.  

அண்ணாமலையை சந்திக்கும் ஓபிஎஸ்..!

தங்களது அணிக்கு ஆதாரவு தரக்கோரி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். 

காங்கிரஸ் வேட்பாளராகிறாரா இவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய்..?

காங்கிரஸ் மூத்த தலைவர் இவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 





ஆதரவு கோரி வாசனைச் சந்தித்த ஓபிஎஸ்..!

ஈரோடு இடைத்தேர்தலில் தங்களது அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரி தமாகா தலைவர் ஜி.கே. வாசனை ஓபிஎஸ் அணியினர் சந்தித்தனர். 

ஆதரவு கோரி அண்ணாமலையை நாடும் ஓபிஎஸ் - இபிஎஸ் அணியினர்..!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்க கோரி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையைச் சந்திக்கவுள்ளனர். 

ஓபிஎஸ்க்கு நன்றி - பொன். ராதாகிருஷ்ணன்..!

பாஜக போட்டியிட்டால் ஆதரவளிப்போம் எனக் கூறிய ஓபிஎஸ்க்கு நன்றி என பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

ஓபிஎஸ் அணி போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ் தான் வாக்குகள் பெறுவார்கள் - ஜெயக்குமார்..!

விரக்தியின் உச்சத்தில் ஓ. பன்னீர் செல்வம் பேசுவதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும், ஓபிஎஸ் அணி போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ் தான் வாக்குகள் பெறுவார்கள் எனவும் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம் - ஓ.பி.எஸ்

எடப்பாடி பழனிசாமி தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம் - ஓ.பி.எஸ்

இரட்டை இலை சின்ன முடங்க ஒருபோதும் காரணமாக இருக்கமாட்டேன் - ஓ.பி.எஸ்

இரட்டை இலை சின்ன முடங்க ஒருபோதும் காரணமாக இருக்கமாட்டேன் - ஓ.பி.எஸ்

பாஜக போட்டியிட விரும்பினால் அதிமுக ஆதரவளிக்கும் - ஓபிஎஸ் பேட்டி..!

ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியிட விரும்பினால் அதிமுக ஆதரவளிக்கும் என ஓ. பன்னீர் செல்வம் பேட்டியில் கூறியுள்ளார். 

அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கில் போட்டியிடுவோம் - ஓபிஎஸ்..!

அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் போட்டியிடுவோம் என ஓ. பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். 

வேட்பாளர் யார் என முடிவு செய்வதற்கு முன்னரே பிரச்சாரத்தை துவங்கிய திமுக - காங்கிரஸ்..!

வேட்பாளர் யார் என முடிவு செய்வதற்கு முன்னரே பிரச்சாரத்தை திமுக - காங்கிரஸ் கூட்டணி துவங்கியுள்ளது. 

எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆலோசனை..!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்த ஆலோசனையை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆலோசனை..!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்த ஆலோசனையை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

இடைத்தேர்தலில் நான்கூட போட்டியிட வாய்ப்பு உள்ளது - டிடிவி தினகரன்..!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நான்கூட போட்டியிட வாய்ப்பு உள்ளது என டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். 

போட்டியிடுகிறதா அமமுக - டி.டி.வி தினகரன் ஆலோசனை..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து அமமுக பொறுப்பாளர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

களமிறங்குகிறதா அதிமுக ஓ. பன்னீர் செல்வம் அணி..?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனவரி 23ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தவுள்ளார். 

ஜி.கே. வாசனின் முடிவை மனதார வரவேற்கிறோம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட ஒத்துழைப்பு கொடுத்துள்ள தமாகா தலைவர் ஜி.கே வாசன் முடிவை அதிமுக மனதார வரவேற்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க பாஜக முடிவு என தகவல்..!

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க பாஜக முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. இன்று கடலூரில் நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் பேசி அண்ணாமலை முடிவை அறிவிக்கத் திட்டம் எனவும் கூறப்படுகிறது. 

விட்டுக்கொடுப்பது சரியானது தான் - யுவராஜா

கூட்டணிக்குள் முரண்டு பிடிப்பது சரியானது இல்லை. விட்டுகொடுப்பது தான் சரி என தமாகா இளைஞர் அணித் தலைவர் யுவராஜா கூறியுள்ளார். 

ஈரோடு கிழக்கில் களமிறங்கும் அதிமுக..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தமாகா சார்பில் யுவராஜா போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Background

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் போட்டியிடுவது குறித்து த.மா.கா. இளைஞரணித் தலைவர் யுவராஜா விளக்கம் அளித்துள்ளார்.  


கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியின்கீழ் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா போட்டியிட்டார். இதில் 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார்.


இதற்கிடையே திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவால் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. 


இந்த நிலையில் தொகுதியில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. அதிமுக சார்பில் யார் நிறுத்தப்படுவார்கள் என்று மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் ABP Nadu சார்பில் யுவராஜாவிடம் பேசினோம். அப்போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:


’’இடைத் தேர்தலில் நீங்கள் போட்டியிடுகிறீர்களா?


த.மா.கா. சார்பில் போட்டியிடத் தயாராக இருக்கிறேன். அதே நேரத்தில் அதிமுக போட்டியிட முடிவு செய்கிறது என்றாலும் ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறோம். 


அதிமுக என்ன சொல்கிறது?


நேற்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனிடம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகப் பேசினார். இன்றும் (ஜனவரி 19) அதிமுக தரப்பில் ஒரு குழு சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இதில் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், கோகுல இந்திரா, பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல ஈரோட்டிலும் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு  நடக்கிறது. அதிமுக, தமாகா கூட்டணிக் கட்சிப் பேச்சுவார்த்தை நாளை (ஜன.20) நடைபெற உள்ளது. 


த.மா.கா. ஒருவேளை போட்டியிட்டால் என்ன சின்னத்தில் நிற்பீர்கள்?


இரட்டை இலை சின்னத்தில் நிற்கலாம். கடந்த முறை அதிமுகவின் சின்னத்திலேயே போட்டியிட்டோம். இந்த முறை வழக்கு உச்ச நீதிமன்றத்தில்  நிலுவையில் இருப்பதால், தனிச் சின்னத்தில் நிற்கவும் வாய்ப்புள்ளது. 


த.மா.காவின் சைக்கிள் சின்னம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருவதால், 2019 தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டோம். ஆட்டோ சின்னம் கிடைத்தால், மீண்டும் அதிலேயே நிற்க வாய்ப்புள்ளது. 


தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?


பண பலம், அதிகார பலம், ஆளுங்கட்சி என்ற அனைத்தையும் தாண்டி வெல்ல வேண்டும். சவாலாகத்தான் இருக்கும். ஆனாலும் நாங்கள் போட்டியிட்டு, வெல்வோம். 


இந்த முறை திமுக கூட்டணியில் ஈவிகேஸ் இளங்கோவன் நிற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளதே.. அனுதாப அலை வெற்றியை சாத்தியமாக்குமா?


கடந்த ஆண்டுகளில் 2 முறை போட்டியிட்டு ஈவிகேஸ் தோல்வியையே தழுவினார். தொகுதியில் அவருக்கெனத் தனிச் செல்வாக்கு ஏதுமில்லை. கடந்த முறை கூட்டணி பலன், பொய்யான வாக்குறுதியால் வென்றார்கள். இம்முறை சொத்துவரி, வீட்டு வரி உயர்த்தப்பட்டதால், தொகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள். ஆளுங்கட்சி பலத்தைத் தாண்டி நாங்கள் வெல்வோம்’’.


இவ்வாறு யுவராஜா தெரிவித்தார்.


அதிமுக தரப்பில் என்ன நடக்கிறது?


இடைத் தேர்தலில் அதிமுக நிலைப்பாடு குறித்து அரசியல் வட்டாரத்தில் விசாரித்தபோது, ''தேர்தலில் போட்டியிடாவிட்டால் 'எடப்பாடி பழனிசாமி பயந்துவிட்டார். அதிமுக தயங்குகிறது' என்று விமர்சனங்கள் எழும் என்று ஈபிஎஸ் தரப்பு யோசிக்கிறது. அதே நேரத்தில் சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், நாங்களே போட்டியிடுகிறோம் என்றும் அவர்களால் சொல்ல முடியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை, அவசர வழக்காக விசாரிக்கச் சொல்ல அதிமுக முடிவு செய்துள்ளது. இதனால் வேட்பாளரை முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது'' என்று தெரிவித்தனர். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.