Erode East By-Election:  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (பிப்ரவரி,07) நிறைவடைந்தது. இறுதிநாளான இன்று மட்டும் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறவுள்ளது. கடைசி நிமிடத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய  வந்த சிலருக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. 


வேட்புமனுக்கல் மீதான பரீசீலனைக்குப் பிறகு போட்டியிடுபவர்கள் எத்தனை பேர் என்பது தெரியவரும். மேலும், வரும் பிப்ரவரி மாதம் 10அம் தேதி, வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தேர்தல் அலுவலரான ஈரோடு மாவட்ட ஆட்சியர் எத்தனை பேர் தேர்தலில் களம் காண்கிறார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.