Erode East By Election 2023: ஈரோடு இடைத்தேர்தல்.. பா.ஜ.க. போட்டியிட்டால் முழு ஆதரவளிப்போம்.. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி..

அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அப்படி போட்டியிட்டால் முழு ஆதரவு அளிப்போம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அப்படி போட்டியிட்டால் முழு ஆதரவு அளிப்போம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

தேர்தல் அறிவிப்பு:

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற திருமகன் ஈவேரா, மாரடைப்பு காரணமாக காலமானதால், அந்தத்தொகுதிக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கடந்த முறை அதிமுக கூட்டணி சார்பில், தமாகா சார்பில் யுவராஜ் களமிறங்கினார். கடந்த சில தினங்களுக்கு முன் எடப்பாடி தரப்பு தமாகா தலைவர் ஜி.கே.வாசனை நேரில் சந்தித்து பேசினர். இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டியிடப் போகிறார்கள் என இன்னும் தீர்மானிக்காத நிலையில் இன்று ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தப்போது, 2026ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள். பொதுக்குழு சட்ட விரோதமாக, எனது இசைவு இல்லாமலே நடைபெற்றது என குறிப்பிட்டார். 

மேலும், அதிமுக தரப்பில் போட்டியிடும் உரிமை உள்ளதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சியும் மேற்கொள்வோம். அதிமுக நலனுக்காக எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்தார். 

இரட்டை இலை சின்னம் இல்லை என்றாலும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவோம் என குறிப்பிட்டார். இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிட்டால் அதற்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம் என கூறியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ள பாஜக தரப்பில் தேர்தல் பணி குழு அமைக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் 14 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. 

2024 தேர்தலில் ஈரோடு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இடைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது முக்கியத்துவம் பெறுகிறது. வாக்கு வங்கி, மக்களின் ஆதரவு ஆகியவற்றை கணித்து நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் பரிச்சார்த்த முயற்சி இது எனக் கூறப்படுகிறது.  

Continues below advertisement