கரூர் அருகே உள்ள புன்னம் சத்திரம் மகளிர் தனியார் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொங்கல் வைத்து நடனமாடி கொண்டாடிய மாணவியர்கள்.




 


கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியிலுள்ள அன்னை மகளிர் கல்லூரி மற்றும் வெள்ளாளர் மகளிர் தனியார் கலை அறிவியல் மற்றும் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 


இந்த பொங்கல் விழாவில் மாணவியர் பாரம்பரிய உடையான சேலை அணிந்து  பங்கேற்றனர். பல்வேறு குழுக்களாக பிரிந்து மாணவியர்கள், புத்தம் புது மண்பானையில் பொங்கல் வைத்து, வழிபாடு செய்தனர்.  தொடர்ந்து, மாணவியர் தமிழகத்தின் பாரம்பரிர விளையாட்டுகளான கும்மியாட்டம், கரகாட்டம், தமிழ் திரைப்படப் பாடலுக்கு ஏற்றவாறு நடனங்களை ஆடி அசத்தினர். அதன்பின், பானை உடைத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவியர் என 700 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


 




கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம்  எலவனூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல், பள்ளி குழந்தைகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


தமிழக முழுவதும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி,அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், தமிழகம் முழுவதும் பொங்கல் விழாவை யொட்டி ஊராட்சியில் பொங்கல் விழா நடத்த அறிவித்த நிலையில்,


 




கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஊராட்சி அலுவலகம் முன்பு பொங்கல் விழா நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் எலவனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் இந்துமதி பாலசுப்பிரமணியம், பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி மற்றும் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி மாணவிகளுக்கு கோலப் போட்டி,மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கினர்.




அரவக்குறிச்சி ஒன்றியம் லிங்கம் நாயக்கன்பட்டி ஊராட்சியில் உங்களை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சி சார்பாக இலவச வேட்டி, சட்டை, புடவைகள் வழங்கப்பட்டது.


லிங்கம் நாயக்கன்பட்டி ஊராட்சியில் பொங்கல் முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சி சார்பாக இலவச வேஷ்டி, சட்டை, புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி பி ஐ கட்சி லிங்கமனநாயக்கன்பட்டி கிளை தலைவர் முஹம்மது முஸ்தபா தலைமையில் நடைபெற்றது லிங்கம் நாயக்கன்பட்டி மூன்றாவது வார்டு கவுன்சிலர் ஷேக் பரீட் முன்னிலை வகித்தார் உங்களை முன்னிட்டு இலவச வேட்டி சட்டை புடவைகள் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் முகமது அலி ஜின்னா பள்ளபட்டி நகர செயலாளர் ஜாபர் சாதிக் மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் லிங்கமநாயக்கன்பட்டி மக்கள் கலந்து கொண்டனர்.
கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.




மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் முதலிடம் பெற்ற அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசு வழங்கி பாராட்டினார்.


ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி காந்திகிராமத்தில் கரூர் மாவட்ட அளவில் திருவிழா போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் அருண்யா செவ்வியல் இசை தனிப்பாட்டில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். மாநில அளவில் தகுதி பெற்றவர். இவர்களுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசு வழங்கி பாராட்டினார்.