அமித் ஷாவை சந்திப்பதற்காக தான் எடப்பாடி பழனிச்சாமி தனது சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்ததாக கூறப்பட்ட நிலையில் யாருக்காகவும் தனது தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று பதிலளித்துள்ளார். 

Continues below advertisement

தன்மானம் தான் முக்கியம்

சென்னையில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் பேசிய இபிஎஸ் அதிமுகவை எவராலும் ஒன்றும் பண்ண முடியாது. சொல்றேன். எழுதிக்கோங்க. எங்களுக்கு ஆட்சி, அதிகாரம் இருப்பதைவிட தன்மானம்தான் முக்கியம். அதில் இம்மியளவும் நான் விட்டுக்கொடுக்க  மாட்டேன்.

அதிமுகவில் வெட்டிப் பேச்சு பேசுவர்களுக்கு இடம் இல்லை. அதிமுகவில் உழைப்பவர்களுக்குதான் இடம். அதிமுகவை சிலர் அடகு வைக்கப் பார்க்கிறார்கள். அனைவரும் துணிந்து நின்று எதிர்க்க வேண்டும்.

Continues below advertisement

ஒபிஎஸ் டிடிவி மீது அட்டாக்

சில பேர் அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தார்கள்ம் அவர்களை மன்னித்து துணை முதலமைச்சர் பதவியை கொடுத்தோம். ஆனால் மீண்டும் திருந்தவில்லை. புனிதமாக, கோவிலாக கருதுகிற அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கினார். அவர்களை எல்லாம் கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டுமா? இன்னொருவர், அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்கு 18 எம்எல்ஏக்களை கடத்திக்கொண்டு சென்றார். அப்படிப்பட்டவர்களையும் கட்சியில் சேர்க்கணுமா? இதையெல்லாம் யார் ஏற்றுக்கொள்வது என்றார்

சுற்றுப்பயணத்தை மாற்றியமைப்பு - இபிஎஸ் மறுப்பு

அமித்ஷாவை சந்திப்பதற்காக தனது சுற்றுப்பயண தேதியை மாற்றியமைத்தாக வெளியான செய்திக்கு இபிஎஸ் மறுப்பு தெரிவித்து பேசிய அவர்“தர்மபுரியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியதன் அடிப்படையில் சுற்றுபயணம் மாற்றம் செய்யப்பட்டது; உடனே மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்கிறார், பேச்சுவார்த்தை நடத்துகிறார், உட்கட்சி பிரச்னை என செய்தி வெளியிட்டுள்ளனர்” என்றார்.

மத்திய அரசுக்கு நன்றி கடன்:

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை சிலர் கபளீகரம் செய்ய பார்த்தார்கள். சிலர் கட்சியை கவலைக்கிடமாக்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தனர். அப்போது கட்சியை ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுத்தவர்கள் மத்தியில் இருப்பவர்கள். பாஜக ஆட்சியில் எந்த தொந்தரவும் தரவில்லை. நாம் கேட்ட நிதியை தந்தார்கள்.. திட்டத்தை தந்தார்கள்.. நன்றி மறப்பது நன்றல்ல என்பதற்கேற்ப அன்று அதிமுகவை பாஜக காப்பாற்றியது. அந்த நன்றி கடனுக்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் அவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள் என்றார்