கடந்த சில நாட்களாக, உலக அளவில் பிரபலமாகி வருகிறது கிப்லி(Ghibli) அனிமேஷன் புகைப்படங்கள். எக்ஸ் தளம், இன்ஸ்ட்டாகிராம் பக்கங்களை திறந்தால், அனைவருமே தங்கள் கிப்லி புகைப்படங்களை பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். அந்த வரியைல், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இணைந்துள்ளார்.
உலக அளவில் ட்ரெண்டாகிவரும் கிப்லி என்பது என்ன.?
ஸ்டுடியோ கிப்லி என்பது அதன் உயர்தர அனிமேஷன் மற்றும் சக்திவாய்ந்த கதைசொல்லலுக்கு பெயர் பெற்ற ஒரு ஜப்பானிய அனிமேஷன் நிறுவனமாகும். ஹயாவோ மியாசாகி என்பவரால் நிறுவப்பட்ட இந்த ஸ்டுடியோ கிப்லி, ஸ்பிரிட்டட் அவே, மை நெய்பர் டோட்டோரோ மற்றும் கிகிஸ் டெலிவரி சர்வீஸ் போன்ற பாராட்டு பெற்ற அனிமேஷன் படங்களுக்கு பெயர் பெற்றது.
தற்போது, ஏஐ சேட் பாட் தொழில் நுட்பத்தின் உதவியுடன் கிப்லி அனிமேஷன் படங்களை உருவாக்குவது பிரபலமடைந்துவருகிறது. ChatGPT- மூலம் குறைந்த அளவிலான ஸ்டுடியோ கிப்லி-பாணி படங்களைதான் உருவாக்கும் முடியும் என்று தெரிவிக்கப்படுள்ளது. 3 படங்களுக்கு மேல் வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் $20 மாத சந்தா கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், எலான் மஸ்க்கின் x AI-யின் Grok chatbot-ல் (Grok 3-ல் இயங்குகிறது) சந்தா செலுத்தாமல் இலவசமாக Ghibli-பாணி படங்களை உருவாக்கலாம்.
இந்த கிப்லியை பயன்படுத்தி தற்போது மீம்ஸ்களை உருவாக்கும் நெட்டிசன்கள், தங்களது புகைப்படங்களையும் ஜப்பானிய அனிமே பாணியில் மாற்றி பதிவிட்டு, வைரலாக்கி வருகின்றனர். OpenAI-ன் ChatGPT-4o அறிமுகப்படுத்திய புதிய வசதிக்குப் பிறகு, இந்த நடைமுறை அதிகரித்துள்ளது. ஆனால், இந்த அம்சம் ChatGPT Plus, Pro, Team மற்றும் Select சந்தா அடுக்குகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. ChatGPT பயனர்கள், அதிகபட்சமாக 3 படங்களை மட்டுமே இலவசமாக கிப்லி புகைப்படமாக மாற்ற முடியும்.
ட்ரெண்டிற்கு மாறிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில், அரசியல்வாதிகள் உட்பட அனைத்து துறை பிரபலங்களும் தங்களது கிப்லி பாணி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த ட்ரெண்டில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இணைந்துள்ளார். தற்போது அரசியல் களம் மிகவும் பரபரப்பான சூழலில் உள்ளது. அதிலும் குறிப்பாக, அதிமுக கூட்டணி குறித்த செய்திகள்தான் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக உள்ளது.
ஆனாலும், இந்த பரபரப்புகளுக்கு மத்தியில், தனது எக்ஸ் தள பக்கத்தில், கிப்லி பாணி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டின் இதயத்திலிருந்து, ஸ்டுடியோகிப்லி உலகம் வரை - காலத்தால் அழியாத கலையுடன் எனது மறக்க முடியாத சில தருணங்களை கலக்கிறது என குறிப்பிட்டு தன்னுடைய புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
தான் விவசாயிகளுடன் இருப்பது, பொதுமக்கள், மருத்துவர்களுடன் இருப்பது, மழை வெள்ளத்தை பார்வையிட்டது என எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.