சென்னையில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5க்கும் மேறபட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.


வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை தரப்பில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் ஆர்.ஏ புரம், வேப்பேரி, ஈ.சி.ஆர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை ஆர்.ஏ.புரத்தில் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூரை சேர்ந்த செல்வராஜ் அரசு ஒப்பந்ததாரர் என சொல்லப்படும் நிலையில், ஜவுளி நிறுவனமும் நடத்தி வருகிறார். ரேஷன் பொருள் விநியோக முறைகேட்டில் செல்வராஜுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 பேர் காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பருப்பு பாமாயில் உட்பட அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாடு அரசுக்கு சப்ளை செய்யும் ஒப்பந்த நிறுவனங்கள் தொடர்பாக கடந்த 2022 நவம்பர் மாதம் வருமான வரி துறை சோதனை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் கிடைத்த ஆவணங்களின் படி தற்போது அமலாக்கத்துறை சோதனையை நடத்தி வருகிறது. அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் அருணாச்சலா இம்பாக்ஸ் என்ற நிறுவனம் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்களை சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர் நிறுவனமாக இருந்து வந்துள்ளது.


ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செல்வராஜ் வீடு அதே போல ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் சென்னை வேப்பேரி ஈ.வி.கே சம்பத் சாலையில் வசிக்கும் தொழிலதிபர்( கட்டுமானம், நிதி, பருப்பு வகைகள் மொத்த விற்பனை ) வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். Arice company partner ஆதவ் அர்ஜூனின் வீட்டில் சோதனை. தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள பாஷ்யம் apartmentல்  வசிக்கும் ஆதவ் அர்ஜுன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூன் உள்ளார். சென்னையில் மட்டும் தற்போது ஐந்து இடங்களில் சோதனை நடைபெறுவதாகவும் , இங்கு கிடைக்கும் ஆவணங்கள் அடிப்படையில் மேலும் சில இடங்களில் சோதனை விரிவடைய வாய்ப்புள்ளது எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...