கோவை மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா 13ஆம் தேதி தொடங்கி இன்று நிறைவு பெறுகிறது.
பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் நெதர்லாந்து, அமெரிக்கா, பிரேசில், கனடா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 10 வெப்ப பலூன்கள் பறக்க விடப்படுகிறது.
இந்த பலூன் திருவிழாவில் 8 நாடுகளில் இருந்து பத்து வகையான பல பலூன்கள் பறக்க விடப்பட்டது. இதை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வதுத்துன் பார்த்து ரசித்தனர். பொள்ளாச்சியில் நடந்தது வரும் பலூன் திருவிழாவில் 60 அடி முதல் 100 அடி உயரம் கொண்ட பலூன்களை காண ஏராளமான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
பொள்ளாச்சியில் காற்றின் வேகம், சமதளம், இயற்கை சூழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழா பொள்ளாச்சியை சுற்றியுள்ள சுற்றுலா இடங்களை உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பாக மைந்துள்ளது.
13ஆம் தேதி தொடங்கிய இந்த பலூன் திருவிழா இன்று (15ஆம் தேதி) வரை நடைபெறுகிறது. வெளிநாடுகளில் மட்டுமே பொதுவாக இதுபோன்ற விழாக்கள் நடத்தப்படும் நிலையில், இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே இந்த பலூன் திருவிழா கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
காலை மாலை என இரு வேலைகளிலும் இந்த பலூன்கள் வானில் பறக்க விடப்படப்படுகிறது. இந்த பலூனில் பரப்பதற்காக ஒரு நபருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த பலூன் திருவிழா முன்னிட்டு உணவுத் திருவிழா மற்றும் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பார்க்கவும் பொதுமக்கள் அதிகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.