மக்களின் சுமையைக் குறைப்பாரா முதல்வர் விஜய்? - விற்பனை வரியைக் குறைக்க இபிஎஸ் விடுத்துள்ள கோரிக்கை
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

தவெக அரசு மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து எரிபொருள் விற்பனை வரியை குறைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும், வணிக எரிவாயு சிலிண்டர் விலையையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து செயல்படுகிறதென்று சொல்கிறார்கள். பெட்ரோலுக்கும், டீசலுக்கும், எரிவாயு சிலிண்டருக்கும் உள்ள விற்பனை வரியை குறைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் உயர்வு
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்தது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100.80 விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.103.90 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.08 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் ரூ.92.39ல் இருந்து ரூ.95.47 ஆக அதிகரித்துள்ளது. கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















