மேலும் அறிய

தலைகால் புரியாமல் ஆடுவதா? பதவி வந்ததும் பணிவு வரணும்- முதல்வர் விஜயை வெளுத்தெடுத்த ஈபிஎஸ்!

தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இதை நாம் சொல்லவில்லை. முதலமைச்சராக ஆவதற்கு உதவிய கூட்டணி கட்சித் தலைவர்கள் சொல்லுகிறார்கள்- ஈபிஎஸ் தாக்கு.

பதவி வந்தவுடன் தலைகால் தெரியாமல் ஆடுகின்றனர். பதவி வரும் போது பணிவு வரவேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேசும்போது கூறியதாவது:

’’சேலம் மாவட்டத்தில் 7 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெற்ற மாவட்டம் சேலம். சேலம் அதிமுகவின் கோட்டை என நிரூபித்துள்ளோம். அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றோம். இதற்கு காரணமாக வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

வெற்றி தோல்வி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப அமையும். அதிமுக கூட்டணி ஒரு கோடியே 45 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. 1996-ல் வெறும் நான்கு இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இப்போது 47 இடங்களில் வென்றிருக்கிறோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம். 2021-ல் 75 இடங்களில் வென்றோம். 2 லட்சம் வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று திமுக ஆட்சியமைத்தது. இடைத் தேர்தலாக இருந்தாலும், பொதுத் தேர்தலாக இருந்தாலும் அதிமுக மீண்டும் வென்று ஆட்சியமைக்கும்.

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இதை நாம் சொல்லவில்லை. முதலமைச்சராக ஆவதற்கு உதவிய கூட்டணி கட்சித் தலைவர்கள் இதை சொல்லுகிறார்கள். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி மோசமாக இருக்கிறதோ அதைப்போலவே தவெக ஆட்சியிலும் தொடர்கிறது. அதை தடுத்து நிறுத்த தவெக அரசால் முடியவில்லை. திருச்சி கிழக்கு தொகுதியில் நன்றி சொன்னபோது, முதலமைச்சர் தீர்ந்து போன கட்சி என பேசியுள்ளார்.

அதிமுக நாட்டு மக்களின் கோரிக்கைகளை தீர்த்து வைத்த கட்சி என முதலமைச்சர் உணர வேண்டும். பதவி வந்தவுடன் தலைகால் தெரியாமல் ஆடுகின்றனர். பதவி வரும் போது பணிவு வரவேண்டும். அதிமுக 31 ஆண்டு காலம் ஆட்சி புரிந்துள்ளது. பொன்விழா கண்ட கட்சி. இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ அதிமுக ஆட்சி நடைபெற்றதே காரணம்.

திரைப்படத்தில் நடித்ததால் வெற்றி

கட்சி ஆரம்பித்து 3 வருடத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்.  எந்த இடத்தில் வாக்குகளை கேட்டாலும், அங்கு அதிமுக ஆட்சியில் என்ன செய்திருக்கிறோம் என சொல்லி வாக்கு கேட்டோம். விஜய் திரைப்படத்தில் நடித்ததால் வெற்றி பெற்றிருக்கிறார். சேவை செய்ததால் அல்ல. திமுக கிடப்பில் போட்டுள்ள மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை தவெக அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.

தவெக அமைச்சரவையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் பேசுகிறார். அவர் பல கட்சியில் இருந்தவர். திமுக,  விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது தவெகவில் இருக்கிறார். அடுத்து வேறு எந்த கட்சியில் இருப்பார் எனத் தெரியவில்லை. ஆனால், நான் அதிமுகவில் தொடர்ந்து 51 ஆண்டுகளாக இருக்கிறேன். மக்களுக்காக பணியாற்றி வருகிறேன். இதை மனதில் வைத்துக் கொண்டு பேச வேண்டும்’’.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

தலையில் குடம் சிக்கி பரிதவித்த தெருநாய்... மணப்பாறையில் தீயணைப்பு வீரர்களின் மனிதநேய மீட்பு!
தலையில் குடம் சிக்கி பரிதவித்த தெருநாய்... மணப்பாறையில் தீயணைப்பு வீரர்களின் மனிதநேய மீட்பு!
திருச்சியில் தெருநாய்கள் தொல்லைக்கு குட்பை... அக்டோபரில் தீர்வு: மாநகராட்சியின் அதிரடி மெகா பிளான்
திருச்சியில் தெருநாய்கள் தொல்லைக்கு குட்பை... அக்டோபரில் தீர்வு: மாநகராட்சியின் அதிரடி மெகா பிளான்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
காக்னிசண்டில் ஃபிரெஷர்களுக்கு சூப்பர் வேலை... 2025, 2026 பட்டதாரிகள் உடனே அப்ளை பண்ணுங்க!
காக்னிசண்டில் ஃபிரெஷர்களுக்கு சூப்பர் வேலை... 2025, 2026 பட்டதாரிகள் உடனே அப்ளை பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டு... எதிர்பார்த்திருந்த மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு - மிஸ் பண்ணாதீங்க- வெளியான தேதி
ஒரே நாளில் ரேஷன் கார்டு... எதிர்பார்த்திருந்த மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு - மிஸ் பண்ணாதீங்க- வெளியான தேதி
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
Embed widget