Edappadi Palanisamy: மகளிருக்கு ரூ.5000... முதல்வரின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்ஷன்?
கனிமவளக்கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு அதிமுக ஆட்சியில் கடும் தண்டனை வழங்கப்படும் - ஆம்பூரில் எடப்பாடி பழனிசாமி பேட்டி.

“இத்தனை கோடை காலம் இல்லாமல் இப்போது தான் விசித்திரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனியார் உணவகத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி. பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
இன்றைய தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின், விசித்திரமான அறிவிப்பை, வெளியிட்டுள்ளார். ஏற்கனவே குடும்பதலைவிகள், உரிமைத்தொகை பெற்று வந்துள்ளவர்களுக்கு 3 மாதத்திற்கு முன் பணமாக 3000 ஆயிரம் ரூபாய் எனவும், கோடை கால தொகுப்பு என 2000 வழங்கப்படும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் காரணங்களையும், தெரிவித்துள்ளார். எங்களையும் மத்திய அரசையும் குறிப்பிட்டு, சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி உரிமைத்தொகை நிறுத்தப்படும் என்பது வடிக்கட்டிய பொய்.
2026இல் மட்டும் கோடை காலம் எப்படி கண் தெரிகிறது?
2024 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலின்போது உரிமைத்தொகை வழங்கப்பட்டது. தேர்தல் தோல்வி பயமாக , தோற்றுவிடுவோம் என்ற பயத்தில், வாக்குகளை பெறுவதற்காக நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.மக்களிடையே, செல்வக்கை இழந்துள்ளது திமுக. 2022, 2023, 2024, 2025 கோடை காலம் வந்துள்ளது, 2026 கோடை காலம் மட்டும் எப்படி கண் தெரிகிறது. குடும்பத்தலைவி கஷ்டத்தை பார்க்க வில்லை, தேர்தலில் அஞ்சியே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஸ்டாலின் திமுக ஆட்சி ஏற்றவுடன் மாதந்தோறும் ரூ.1000 என அறிவித்தார். 27 மாதம் வழங்கப்படவில்லை, இதனை எதிர்க்கட்சியில் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆட்சி ஏற்றவுடன், 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பை நம்பி குடும்பதலைவிகள் வாக்களித்தார்கள். 27 மாதம் தொடர்ந்து வலியுறுத்தினோம். 28 ஆம் மாதத்தில் தான் திமுக உரிமைத்தொகை அளித்துள்ளது. 27 மாதம் பாதிக்கப்படவில்லையா குடும்ப தலைவிகள், திட்டமிட்டு, தேர்தலைவைத்து குடும்பதலைவிகள் வாக்குபெறுவதற்காக இந்த அறிவிப்பு.

கனிம வளக்கொள்ளையில் ஈடுபட்டுவர்களுக்கு அதிமுக ஆட்சியில் கடும் தண்டனை வழங்கப்படும்
பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்கள் ஸ்டாலின். லேப்டாப் விஞ்ஞான கல்வி கிடைக்க அம்மா அளித்த திட்டம், இந்த திட்டத்தை முடக்கி, தோல்வி பயத்தில் இளைஞர்கள் வாக்கு தேவை என கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குகிறார். 2025 ஆம் ஆண்டு லேப்டாப் அளித்திருக்க வேண்டும்
பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு கொடுக்குகிறார்கள்.
அமித்ஷா தமிழகத்திற்கு வருவது அவரது கட்சி நிகழ்ச்சிக்கு, வாய்ப்பு வரும்போது அவரை சந்திப்போம் என தெரிவித்தார். இன்னும் எங்கள் கூட்டணியில் சில கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது. திமுகவிற்கு போய் அதிமுகவிற்கு வந்தவர், முன்னாள் அமைச்சர் நீலோபர் கபீல், அவர் குறித்து எந்த பதிலும் அளிக்க விரும்பவில்லை, இந்த ஆட்சியில், கனிம வளக்கொள்ளையில் ஈடுபட்டுவர்களுக்கு, அதிமுக ஆட்சியில் கடும் தண்டனை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவகாரம் முழுமையாக தெரியாது, அப்படி பட்ட சம்பவம் தவறு, பிரதமரை முடுக்குவது, தவறு, ஊடகத்திலும், பத்திரிகையிலும் சர்வாதிகாரி போல் செயல்படுகின்றனர். அதிமுக விமர்சனம் பற்றி கவலைப்படுவதில்லை எனப் பேசினார்























