அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

Continues below advertisement

அதிமுக முதுகில் குத்திய தவெக:

தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பொய்க்கால்  குதிரை அரசு தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்தி உள்ளது.

திமுக-வுடன் கூட்டணியா?

பொதுவாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து டிசைன் டிசைனாக கற்பனை செய்திகள் வலம் வரும். அப்படித்தான், திமுக-வுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. இந்தச் செய்தி உண்மையா? என்று நேரில் கேட்டவர்களுக்கு தெளிவான விளக்கம் அளித்தோம். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மக்களும், நம் கட்சியின் நிர்வாகிகளும் உறுதியாக நம்பினார்கள்.

Continues below advertisement

ஆனால், தமிழக வெற்றிக் கழகம், நம் கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு பொய்க்கால் குதிரை அரசு அமைத்துவிட்டது.

அதிமுக செழித்து வளரும்:

நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சனைகள் உள்ளன. அதேபோல், நமது கட்சியிலும் பிரச்சனை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான்.

கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செழித்து வளரும். அம்மாவின் ஆட்சி விரைவில் அமையும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர் தோல்வி அடைந்ததன் காரணமாகவும், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதன் காரணமாகவும் ஏற்பட்ட கருத்து மோதலால் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையில் ஒரு தரப்பு எம்எல்ஏ-க்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் பொதுக்குழுவை கூட்ட தொடர் முயற்சியை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாகிக் கொண்டே போகிறது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், யார் ஆட்சியமைக்கப்போகிறார்கள்? என்ற கேள்வி எழுந்தது. தவெக ஆட்சியமைக்க தொடக்கத்தில் முயற்சி செய்த நிலையில், அவர்களுக்கு மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், விசிக ஆகியோரின் ஆதரவு கிடைக்கவில்லை. 

அப்போது, திமுக - அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்ததாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகியது.  எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்க முயற்சித்ததாகவும் தகவல் வெளியாகியது. இதை உறுதிப்படுத்தும் விதமாக மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பேபி, அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், விசிக தலைவர் திருமா ஆகியோர் பேட்டி அளித்திருந்தனர். 

இந்த சூழலிலே, எடப்பாடி பழனிசாமி இதை மறுத்துப் பேசியுள்ளார். 

">