Edappadi Palanisamy : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இபிஎஸ் மீது வழக்குப்பதிவு


எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தன்னுடைய தேர்தல் வேட்பு மனுவில் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு சொத்து உள்ளிட்ட விவரங்களை குறைத்து காட்டியதாக தேனி மாவட்ட திமுக முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் மிலானி புகார் அளித்துள்ளார்.  


இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது வேட்பு மனுவில் எடப்பாடி பழனிசாமி சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியதாக அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கிழ் 125 ஏ (1), 125 ஏ(1), 125 ஏ(11) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.