சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக எழும்பூர், வடபழனி, தேனாம்பேட்டை, சாலிகிராமம், கோடம்பாக்கம், உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில்  அதிகாலையில் மிதமான மழை பெய்தது. அண்ணாசாலை, வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், அதிகாலையில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


மழைக்கு வாய்ப்பு:


இதனிடையே மண்டல வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்கள் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பொது மக்கள், மின்னல் தாக்கும் போது திறந்த வெளியில் நிற்பதை தவிர்க்கவும். இடி மின்னல்களில் இருந்து  பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தவரை ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.