நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

Continues below advertisement

கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி துறை அமைச்சராக இருந்தபோது பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கியதாக எழுப்பப்பட்ட புகாரில் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வழக்குப் பதிவு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

 

Continues below advertisement

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்தபோது கே.என்.நேரு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகாரில் அமலாக்கத்துறை கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. நகராட்சி நிர்வாகத்துறையில் சுமார் 2538 பணியிடங்களை நிரப்ப லஞ்சம் கைமாறியதாக புகாரில் டிவிஏசி வழக்குப் பதிவு செய்தது. ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

திமுக ஆட்சியில் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்திய நிலையில், தவெக ஆட்சி அமைந்த பிறகு முன்னாள் அமைச்சர் மீது முதல்முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.