அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்.


 




 


அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் காலை நிறுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து கடந்த, 1ஆம் முதல் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு, 2,200 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.  நீர் பிடிப்பு பகுதிகளில், மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீர் குறைந்தது. இதனால், ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் வினாடிக்கு, 100 கனஅடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் காலை, 8:00 மணி நிலவரப்படி அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், ஆற்றுப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நிறுத்தப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தற்காலிகமாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அமராவதி அணைக்கு காலை வினாடிக்கு, 1,247 கனஅடி தண்ணீர் வந்தது. காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2,258 கனஅடியாக அதிகரித்தது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 53.94 அடியாக இருந்தது.



மாயனூர் கதவணை


 




 


கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு காலை வினாடிக்கு, 9,415 கனஅடி தண்ணீர் வந்தது. டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 8,795  கன அடியும், தென்கரை வாய்க்காலில், 200 கன அடியும், கீழ்கட்டளை வாய்க்காலில், 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆத்துப்பாளையம் அணை, கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 10.03 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


 



 




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.