ஆளுநர் அனுமதி அளித்ததை அடுத்து குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சேர்க்கப்பட்டுள்ளார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 


108 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்:


ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.108 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். வருவாய் புலனாய்வுப் பிரிவு, கடலோர காவல்படை இணைந்து நடத்திய சோதனையில் 99 கிலோ ஹாஷிஷ் சிக்கியது. 


மேலும் அவர் பேசுகையில்,” ஒன்றிய அரசின் கட்சியில் இருப்பவர்கள்தான் இப்படிப்பட்ட தொழிலில் ஈடுபடுகின்றனர். 18- பேரின் பட்டியல் என்னிடம் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் மாநிலம் குஜராத். அதுதான் நீண்ட கடற்கரை பரப்பை கொண்டிருக்கிறது. 1660 மீ கடற்கரை உள்ளது. குஜராத் பகுதியில்தான் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பது தெரிந்ததே. அங்கிருந்தும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லாவற்றிற்கும் உடந்தையாக ஒன்றிய அரசு இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு மீது குற்றச்சாட்டு வைப்பது வீண் விவாதத்திற்கு வழிவகுப்பதாகும். தமிழ்நாட்டில் அமைதியான ஆட்சி நடைபெற்று வருகிறது. அமைதியான மாநிலமாக திகழ்கிறது. இங்க எந்த குழப்பத்தையும் யாரும் ஏற்படுத்திவிட முடியாது.


மோடி ஃபார்முலாவா?


Narcotics Control Bureau என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கு நாம் எல்லாரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்தியா முழுவதும் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரிப்பதற்கு யார் காரணம்? மற்றவர்கள் மீது பழி போடுவதற்கு பெயர் மோடி ஃபார்முலாவா? என கேட்க விரும்புகிறோம்.


இந்தியா முழுவதும் இருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா , வடகிழக்கு மாநிலங்கள் போன்ற பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டம் இருக்கிறது.  தமிழ்நாடு மீது பழிபோடுவது, தேர்தல் நேரத்தில் இப்படி செய்தால் அதற்காக தமிழ்நாடு மக்கள் ஏமாளிகள் அல்ல என்பது நாடறிந்த உண்மை. 


இதுதான் மோடி ஃபார்முலா?


21- கோடி ரூபாய் கொண்ட ஹெராயின் குஜராத் கடற்கரையில் நடமாட்டம் இருக்கிறது. துறைமுகங்கள், ரயில்வே நிலையம், விமான நிலையம் ஆகியவை தனியாருக்கு தாரை வார்த்து விட்டோம். ஆனால், இவை அரசங்க பணத்தில் நவீனமாக்கப்படுகின்றனர்; விரிவாக்கம் செய்யப்படுகின்றனர். இவை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது. தனியாரிடம்தானே இருக்கும். தனியார்மையத்தை எதிர்கிறோம்.


ஏர் இந்தியா அரசாங்கம் டாடா நிறுவனத்திடமிருந்து வாங்கினாங்க. இன்றைய அரசு அவர்களே அதை திருப்பி கொடுக்கிறார்கள். இதற்கு பெயர் மோடி ஃபார்மலாவா? மோடி அரசியலா? மோடியிசமா? என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.


2019-ம் ஆண்டு 11,418 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2020-ல்  15,144 கிலோ, 2021- 20,432 கிலோ, 2022 - 28,381 கிலோ, 2023-ல் 23,304 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.2023 -2426 வழங்குகளில் 80% தண்டனை வழங்கப்பட்டுள்ளது. " என்று தெரிவித்தார்.


தமிழ்நாட்டில் சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 23 வழக்கு தொடரப்பட்டுள்ளது. 14 பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.



  • சரவணன் - உறுப்பினர், பா.ஜ.க.

  • ராஜேஷ் - 109-வார்டு,சென்னை வட்டத் தலைவர், பா.ஜ.க.

  • விஜய நாராயணன் - மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர், பா.ஜ.க.

  • விஜயலெட்சுமி - செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் - நெடுங்குன்றம் துணைத் தலைவர்

  • மணிகண்டன் - தாழ்த்தப்பட்டோர் பிரிவு மண்டலத் தலைவர், பா.ஜ.க.

  • ஆனந்த் ராஜ் - திருவள்ளூர் மேற்கு மாவட்ட SC/ST பிரிவு மாவட்ட துணைத் தலைவர்

  • ராஜா (எ) வசூல்ராஜா, இளைஞர்நலன் மற்றும் அபிவிருத்தி பிரிவு செயலாளர், பா.ஜ.க.

  • குமார் (எ) குணசீலன், உறுப்பினர், பா.ஜ.க.,

  • மணிகண்டன், திருச்சி - உறுப்பினர், பா.ஜ.க.

  • லிவிங்கோ அடைக்கலராஜ் - பெரம்பலூர் , முன்னாள் மாவட்ட செயலாளர், பா.ஜ.க.

  • சிதம்பரம் (எ) குட்டி - தஞ்சாவூர் வடக்கு மாவட்ட துணை தலைவர்

  • ராஜா (எ) சூரக்கோட்டை ராஜா - விவசாய பிரிவு மாநில செயலாளர், பா.ஜ.க. 

  • சத்யா (எ) சத்யராஜ், உறுப்பினர்-பா.ஜ.க.

  • காசிராஜன் (எ) காசி, மதுரை இளைஞர் பிரிவு செயலாளர், பா.ஜ.க.


இவர்கள் கைதானவர்கள்


எய்ம்ஸ்


எய்ம்ஸ் குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர்,” தேர்தல் வரும்போது எய்ம்ஸ் வரும்.  தேர்தல் முடிந்ததும் எய்ம்ஸ் போய்விடும்.” என்று தெரிவித்தார். செந்தில் பாலாஜி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தவர், “ அதை பழிவாங்கும் செயல் என்று சொல்லிவிட முடியாது. நீதிமன்றத்தினால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. எனவே, அதுபற்றி வேறேதும் சொல்ல முடியாது. செந்தில் பாலாஜிதான் தனது அமைச்சர் பதவியை ராஜிமானா செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவரை ராஜினாம செய்ய சொல்லவில்லை.” என்று தெரிவித்தார். 


போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக உள்ளது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.