பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளின் உணவு பட்டியலில் தோசை, இடியாப்பம் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் விடுதிகளில், ஏழை மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். உணவு செலவுக்கான மானியத்தில் மாற்றம் இல்லாமல், உணவு வகைகளை மாற்றி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 






இதில், தோசை மற்றும் இடியாப்பம் உட்பட புதிய சிற்றுண்டிகளும் சேர்க்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சேமியா, கிச்சடி, பூரி, இட்லி, பொங்கல் போன்ற உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், இத்துடன், சாம்பார், சட்னியுடன் தோசை அல்லது நவதானிய தோசை, பட்டாணி குருமா அல்லது தேங்காய் பாலுடன் இடியாப்பம் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த உத்தரவு கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3-ம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 


முன்னதாக, போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ராஜகண்ணப்பன், போக்குவரத்து துறை அதிகாரி ஒருவரை சாதியை சொல்லி திட்டியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவரது போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு அவர் பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு அமைச்சராக மாற்றப்பட்டார்.




பிற முக்கியச் செய்திகள்:










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண