புதுச்சேரி மாநில அரசுக்கு எதிராக நான் செயல்படவில்லை ஆதரவாக தான் செயல்பட்டு வருகிறோம் என்று காரைக்காலில் நடைபெற்ற அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்தார்.

 

காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் காரைக்கால் மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரா பிரியங்கா, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் பல்வேறு துறை சேர்ந்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

 

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “காரைக்கால் மாவட்டத்தில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நிறைவுபெற்றுள்ளது. மிக விரைவில், தண்ணீர் இணைப்பு வழங்கப்படும். தோண்டப்பட்ட சாலைகள் சரி செய்யப்படும். பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அதேபோல், அரசு மருத்துவமனை, போலீசில் உள்ள காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும். மேலும் காரைக்கால் மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதனால், காரைக்கால் மாவட்ட வளர்ச்சி எந்த வித்திலும் தடைபடாது. காரைக்கால் எந்த விததிலும் புறக்கணிக்கவும்படாது.

 

மேலும் புதுச்சேரி மாநில அரசுக்கு எதிராக நான் செயல்படவில்லை ஆதரவாக தான் செயல்பட்டு வருகிறோம்” என்றார். தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, கவர்னரிடம் அரசியல் பற்றி கேட்ககூடாது கேட்டுவிட்டீர்கள். இதற்கு அண்ணாமலையிடம்தான் பதில் உள்ளது என்றார்.