ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன், குரு, சனி போன்ற கிரகங்கள் வலிமையானதாக உலா வருகின்றன... இதில் புதன் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி பல இன்னல்களை சந்தித்து வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.... புதன் வலிமை இழந்தால் சிறு வயதில் இருந்து படிப்பில் சற்று கவனம் குறைவாக இருக்கும் அல்லது சுமாராக படிப்பார்கள் லக்னத்தில் இருந்து ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து, ஏழு, பதினொன்று போன்ற இடங்களில் புதன் இருந்தால் அது வலிமை என்று சொல்லப்படுகிறது…

Continues below advertisement

 ஆனால் அதே புதன் ஆறாம் இடத்திலோ 12ஆம் இடத்திலோ மறைந்து போனால் சரியாக படிப்பு வராது... பேச்சில் சற்று தடுமாற்றம் இருக்கும், பேசுவது புரியாது... போன்ற காரியங்களை எடுத்து கூறுவார்கள். குறிப்பாக ஜாதகர் பேசும் பேச்சில் ஒரு நிதானம் இருக்காது என்றும் சொல்லுவது உண்டு... புதனுடன் கேதுவோ, புதனுடன் ராகவோ, சேர்ந்தால் தாய் மாமா உறவு சுமூகமாக இருக்காது என்று கூறுவது உண்டு... இப்படியாக பேச்சாக... எழுத்தாக... நகைச்சுவை உணர்வாக...ஒரு காவல் காக்கும் காப்பாளனாக... தாய் மாமன் உறவாக.... புதன் பல பரிமாணங்களில் நம்முடைய ஜாதகத்தில் மிளிர்கின்றார். பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை என்றாலும்... ஒரு நிலத்தில் செவ்வாய் வலிமையாக இருக்கும்.... அந்த ஜாதகத்திற்கு புதன் வலிமை இருந்திருக்காது.... இதனால் மிகவும் அவதிப்படுவார்கள் நிலங்களை வைத்திருப்பவர்கள் அவர்களுக்கும் இதே பரிகாரம் பொருந்தும்…

 புதன் எழுதுகோல் என்று சொல்லக்கூடிய பேனா பேச்சாற்றல் மிக்கவர் நாம் மனதில் என்ன நினைக்கிறோமோ அதை வெளிப்படையாக பேசுவதற்கு புதன் மட்டுமே மிகச் சிறப்பாக உதவி புரிவார் சாதாரணமாக ஒரு மனிதன் பேசினால் ஒன்று நன்றாக இருக்கும் என்பார்கள் அல்லது ஏதோ இருக்கிறது என்று சொல்லுவார்கள் ஆனால் புதன் வலிமை இழந்தவர்கள் பேசும்பொழுது புரியவில்லை என்று அதிகப்படியான நபர்கள் கூறுவது உண்டு… இதற்கு பரிகாரமாக ஒரு நோட்டை வாங்கிக் கொள்ளுங்கள் பி ராமஜெயம் என்ற பகவான் ஸ்ரீ ராமரின் நாமத்தை 108 முறை எழுதுங்கள் முதல் நாள் அந்த புத்தகத்தில் ஒன்பது முறை எழுதுங்கள் அடுத்த முறை எழுதும் போது 18 முறையாக எழுதுங்கள் இப்படி ஒன்பதால் பெருக்கக் கூடிய எண்களை எழுதி இறுதியாக 108 வரை தொழும்போது பிறகு அந்த 108 எழுத தொடங்குங்கள் இப்படியாக ஸ்ரீ ராமரின் நாமத்தை எழுதும் நபர்களுக்கு புதன் மிக மிக வலுவானவராக மாறுகிறார் குறிப்பாக வேலையில் மற்றவர்களால் ஒதுக்கப்பட்ட இடத்தில் உங்களுக்கான அங்கீகாரத்தோடு மிகச் சிறப்பாக வளர்ந்து எழுந்து நிற்பீர்கள்…

Continues below advertisement

 குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் மனப்பாட சக்தி உயரும் அதிகப்படியான புத்தக சுமை இருக்கிறது என்றாலும் கூட குழந்தைகள் கெட்டிக்காரர்களாக மாறுவார்கள் உங்களுக்கான நேரம் வந்துவிட்டது குதிரை ஆக்டிவேட் செய்வதற்கு எழுதுங்கள் எழுதுங்கள் எழுதிக் கொண்டே இருங்கள் சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று நீங்கள் எழுதியதை அவர் பாதத்தில் வைத்து அவரிடம் சமர்ப்பித்து விடுங்கள் அல்லது அவருடைய பாதத்தில் வைத்து வீட்டின் பூஜை அறையில் வைத்து விடுங்கள் இப்படியாக பெருமாளின் அனுக்கிரகம் உங்களுக்கு எப்பொழுதும் கிடைக்க ஸ்ரீ ராமர் அவர்களின் பெயரை 108 முறை எழுதி உங்களுக்கு எத்தனை பக்கங்கள் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது அத்தனை பக்கங்களும் எழுதிக் கொண்டே இருங்கள் ஏற்கனவே இதுபோன்று எழுதியவர்களின் வாழ்க்கையில் பெருமாள் மிகச் சிறப்பாக செயல்பட்டு புதனை அதிகப்படியாக ஆக்டிவேட் செய்யப்பட்டு வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சவுரியங்கள் கிடைக்கப்பெற்றதை நம் கண்ணார கண்டிருக்கிறோம்…