Continues below advertisement

உங்களுடைய ஜாதகத்தில் ஐந்தாம் பாவம் வலுத்திருந்து ஒன்பதாம் பாவம் நல்ல நிலையில் சுபத் தன்மை அடைந்திருந்தால் மறுபிறவி உண்டு என்று வைத்துக் கொள்ளலாம்… அதேபோல ஒருவருடைய ஜாதகத்தில் பன்னிரெண்டாம் இடம் நல்ல நிலையில் இருந்தாலும் கூட மறுபிறவி உண்டு என்று எடுத்துக் கொள்ளலாம் பிறவி என்பது இந்த உடல் மண்ணுக்கு போய் சேரும்… ஆனால் உங்களுடைய ஆன்மா மீண்டும் பிறவி எடுத்து வேறு ஒரு உருவில் வடிவில் வேறு ஒரு நிலையில் இந்த பூமியில் இருந்து கொண்டே இருக்கும்…

 சிலர் மறுபிறவி இருக்கு என்று கூறுகிறார்கள் இன்னும் சிலர் இல்லை என்று சொல்லுகிறார்கள் எதை உண்மை என்று எடுத்துக் கொள்வது மரம் விதையிலிருந்து வளர்கிறது கனியாக மாறுகிறது மீண்டும் விதியாக வேறு ஒரு இடத்தில் விழுகிறது மீண்டும் அது வேறு ஒரு மரமாய் வளர்கிறது இப்படியாக இடத்தை மாற்றிக் கொண்டே ஒரு மரத்தின் விதைகள் தொடர்ந்து வேர் விட்டுக் கொண்டே இந்த பூமி முழுவதும் பறந்து கிடக்கிறது…. மரம் விரைவாக மாறுகிறது விறகு நெருப்பிலிருந்து ஆவியாக செல்கிறது ஆவி காற்றில் கலக்கிறது அதே காற்று வேறு ஒரு இடத்தில் விதையாக முளைக்கும் மரத்திற்கு எனர்ஜியாக மாறுகிறது இப்படி யார் யாராக வேண்டுமென்றாலும் மாறலாம்…

Continues below advertisement

 ஐன்ஸ்டீன் அவர்களின் ஒரு அருமையான தத்துவம் இருக்கிறது அதாவது energy can neither be created nor be destroyed it can transform from one form to another… இப்படியாக ஒரு எனர்ஜி அழியாது அது ஒரு வடிவில் இருந்து இன்னொரு வடிவுக்கு மாறும் என்பது தான் மறுபிறவி… இது என் சித்தறிவுக்கு தெரிந்து நான் புரிந்து வைத்துக் கொண்டிருப்பது நீங்கள் இந்த பிறவியில் நல்ல கர்மாக்களை செய்து நல்லவர்களாக வாழ்ந்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு முடிந்தவரை இல்லாதவர்களுக்கு உதவி செய்து பாசிட்டிவாக பூமியில் இருந்தால் மறைந்த பிறகு உங்களுடைய அனைத்தும் அடுத்தடுத்த வடிவங்களில் மிக மிக அற்புதமாக உயர்ந்த இடங்களில் உங்களை கொண்டு போகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை…

 இதைப் பற்றி நாம் பேசும்பொழுது யாரேனும் மறுபிறவி பற்றி பார்த்திருக்கிறார்களா அல்லது உணர்ந்து இருக்கிறார்களா அல்லது தெரியுமா என்று கேட்டால் சித்தர்கள் பிறவி எடுப்பதை பற்றி பல நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள் அதேபோல புராண கதைகள் பற்றி குறிப்பிடப்படுகின்றது முக்கியமாக ஜோதிடத்திலும் 12-ல் கேது இருந்தால் அவருக்கு மறுபிறவி இல்லை என்று ஒரு கூற்று உண்டு…

 மறுபிறவி பற்றி கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கு 12 கேது தவிர்த்து ஏனைய கிரகங்கள் அமர்ந்திருந்தால் நிச்சயமாக மறுபிறவி உண்டு குறிப்பாக 12 இல் ராகு அமர்ந்திருந்தால் உள்ளூரில் அந்த ஆத்மா இல்லாமல் வெளி மாநிலத்தில் வெளிநாட்டில் அந்த ஆத்துமா உலாவரும் அல்லது அந்த வேறு இடத்திற்கான தன்மையாக அந்த ஆத்மா மாறும் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்… நீங்கள் நீங்கள் தற்பொழுது எடுத்திருக்கின்ற இந்த பிறவியை பற்றி நன்றாக கவலைப்படுங்கள் இல்லாதவருக்கு உதவி செய்யுங்கள் ஏழைகளுக்கு மனதார உதவுங்கள் அன்னதானம் செய்யுங்கள் பசியாய் இருக்கிறவர்களுக்கு பசியாற்றுங்கள்… நிச்சயமாக மறுபிறவியில் நீங்கள் ராஜாவாகத்தான் பிறப்பீர்கள்…