DMK Meeting Salem LIVE: சேலத்தில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு(DMK Youth Wing Conference) கட்சி கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. திமுக இளைஞரணி மாநாட்டை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி கனிமொழி கொடியேற்றி தொடங்கி வைத்தார். 


இதை தொடர்ந்து, மாநாட்டு பந்தலை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் திறந்து வைத்தார்.  மாநாட்டினையொட்டி மொழிப் போர் தியாகிகளின் படங்கள் திறக்கப்பட்டது. தொடர்ச்சியாக, மாநாடு இளைஞரணி செயலாளர் மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிவதுடன் தொடங்கி, மாநாட்டின் தீர்மானங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட திமுக முன்னணி தலைவர்கள் பேச உள்ளனர்.  மாலையில் பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், மாநாட்டு தலைவரும்  திமுக இளைஞரணி செயலாளரும் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை உரையாற்ற உள்ளார். இந்த இளைஞரணி செயலாளர் உரைக்கு பின்னர் முதலமைச்சர் மாநாட்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.


இந்தநிலையில், சேலத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாட்டை(DMK Youth Wing Conference Salem) எங்களது ABP நாடு யூடியூப் பக்கத்தில் நேரலையில் நீங்கள் காணலாம்.