DMK Youth Wing Conference LIVE: தெற்கில் விடியல் வந்ததைப் போல் இந்தியாவில் விரைவில் விடியல் பிறக்கும் - முதலமைச்சர் ஸ்டாலின்
DMK Youth Wing Conference Salem LIVE Updates: சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாடு தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் இணைந்திருங்கள்.
எனக்கு 30 வயதாக இருக்கும்போது இளைஞர் அணி உருவாக்கப்பட்டது.அப்போது என் மீது கலைஞர் வைத்திருந்த நம்பிக்கை போல, உதயநிதி மீது வைத்த நம்பிக்கை வெற்றி பெற வைத்து விட்டது எந்த கொம்பனாலும் திமுகவை எதுவும் செய்து விட முடியாது என்பதை திமுக இளைஞரணி மாநாடு நிரூபித்து விட்டது. இளைஞர் அணி என்பது என்னுடைய தாய் வீடு. என்னை உருவாக்கிய இடம். திமுக தலைவராக, தமிழக முதலமைச்சராக அடித்தளம் இட்டதே இளைஞர் அணிதான். அதனால் எனக்கு தனிப்பாசம் உண்டு. 1980ம் ஆண்டு இளைஞர் அணி தொடங்கியது முதல் இன்று வரை போராட்டக் களங்கள், தேர்தல் பரப்புரை என எல்லா இடங்களிலும் இளைஞர் சுற்றி சுழன்று வருகின்றனர். உழைப்பு உழைப்பு என கலைஞர் பாராட்டியதற்கும், இளைஞர் அணிதான் காரணம். இளைஞர் அணியின் போர்வாள்தான் இந்த ஸ்டாலின். இளைஞர் அணியிலிருந்து எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்,அமைச்சர்கள் வந்துள்ளனர். உழைப்பினால் இந்த உயரத்திற்கு நீங்கள் வரவேண்டும் என முதலமைச்சர் பேசினார்.
இந்தியா கூட்டணியின் ஆட்சி சர்வாதிகார ஆட்சியாக இருக்காது, கூட்டாச்சியாக இருக்கும் மாநிலங்களை பாதுக்காக்கும் ஆட்சியாகவும் இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
மோடிக்கு கடந்த இரண்டு முறை தமிழ்நாடு வாக்களிக்கவில்லை இம்முறையும் வாக்களிக்காது என முதலமைச்சர் பேசியுள்ளார்.
மாநில உரிமைகளைப் பறிப்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் பேசவுள்ளார்.
மாநிலங்களை ஒழித்துக் கட்டும் முயற்சியை பிரதமர் மோடி செய்கின்றார் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசி வருகின்றார்.
எடப்பாடி பழனிசாமியின் பகல் வேஷத்தினை அதிமுகவினரே நம்பவில்லை என முதலமைச்சர் பேசி வருகின்றார்.
இளைஞர் அணியினர் பொறுப்புக்கு வரவேண்டும் என சேலம் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசி வருகின்றார்.
திமுக இன்னும் கம்பீரமாக இருக்க கொள்கை உரமே காரணம் என சேலம் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசி வருகின்றார்.
திமுக இளைஞரணி எனது தாய் வீடு என முதலமைச்சர் ஸ்டாலின் பேசி வருகின்றார்.
வரும் மக்களவைத் தேர்தலுக்கு இளைஞர் அணியினருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி, முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டர்.
மத்திய அரசின் மிரட்டலுக்கு திமுகவின் கைகுழந்தை கூட பயப்படாது என அமைச்சர் உதயநிதி பேசி வருகின்றார்.
இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என அமைச்சர் உதயநிதி பேசி வருகின்றார்.
நீட் எதிர்ப்பிற்கு டெல்லியிலும் போராட்டம் நடத்த திமுக இளைஞரணி தயாராக உள்ளது என அமைச்சர் உதயநிதி பேசி வருகின்றார்.
சேலத்தில் வீரத்தோடு திமுக இளைஞர் அணி திரண்டுள்ளது என அமைச்சர் உதயநிதி பேசி வருகின்றார்.
10 ஆண்டுகால பாசிச ஆட்சியை விரட்ட நாங்கள் தயாராகிவிட்டோம் என அமைச்சர் உதயநிதி பேசி வருகின்றார்.
மாநாட்டில் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பேசி வருகின்றார்.
வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இரண்டு மத்திய அமைச்சர்கள் வந்தனர், ஆனால் ஒரு பைசா நிவாரண நிதி வரவில்லை மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசினார்.
கட்டிமுடிக்காத கோவிலை திறந்து இந்து மக்களின் உணர்வை புண்படுத்துகின்றது பாஜக என கனிமொழி பேசி வருகின்றார்.
வடநாட்டில் இருக்கும் கருப்பை விரட்டவேண்டும் என கனிமொழி பேசி வருகின்றார்.
இந்து மத தேசியம் எங்களுக்குத் தேவையில்லை என மாநாட்டில் பேசிய ஆ. ராசா குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் திராவிட தேசியம்தான் தேவை என பேசியுள்ளார்.
மாநாடு மேடைக்கு வந்த முதலமைச்சருக்கு இளைஞரணி பொறுப்பாளர்கள் செங்கோல், வாள், கேடயம் அளித்தனர்.
நாட்டைக் காக்கும் போருக்கு தயாராகுங்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மாநில சுயாட்சிக்காக தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் தமிழ்நாடுதான் என சு.ப. வீரபாண்டியன் பேசி வருகின்றார்.
மாநில சுயாட்சி என்பது பேரறிஞர் அண்ணாவின் உயில் என சு.ப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
நாளைய இந்தியா மாநில சுயாட்சி கொண்டதாக இருக்கவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டது இந்த மாநாடு என சு.ப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத்தந்தவர் கலைஞர் என தயாநிதி மாறன் கூறினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கழகத்தின் எதிர்காலம், தமிழ்நாட்டின் வருங்காலம் என தயாநிதி பேசியுள்ளார்.
கலைஞரின் பேனா என்ற தலைப்பில் இயக்குநர் கரு. பழனியப்பன் பேசுகையில், உதயநிதி ஸ்டாலின் மோஸ்ட் டேஞ்சரஸ் தென் ஸ்டாலின் என கூறியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சர் ஆவாரா இல்லையா என்பதைவிட முதலமைச்சருக்கு பக்கபலமான அமைச்சராக உள்ளார்.
சனாதனம் எதிர்ப்பு குறித்து பேசியபோது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது, நான் தொடர்ந்து சனாதன எதிர்ப்பு குறித்து பேசுவேன் என நீதிமன்றத்தில் அழுத்தம் திருத்தமாக சொன்ன உதயநிதி ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்துவோம் என பிரசன்னா கூறியுள்ளார்.
தமிழ் நாட்டு மக்களுக்கு இருக்கும் ஒற்றை நம்பிக்கை உதயநிதி ஸ்டாலின் மட்டும்தான் என மக்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா பேசியுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களுக்கு காட்டிய செங்கல் வீடியோ திமுக இளைஞரணி தொண்டர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டியுள்ளார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு தனது பங்களிப்பான 50 சதவீத நிதியை தரவில்லை. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. 2021ல் கொரோனா காலத்தில் பொருளாதாரத்தில் தமிழ்நாடு மட்டும்தான் தப்பிப் பிழைத்த மாநிலம்.
கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரி தீர்மானம்.
திமுக இளைஞரணி மாநாடு வெற்றிபெற சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை திமுக இளைஞரணியின் போராட்டம் ஓயாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்களை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்தார். அவை பின்வருமாறு..
திமுக இளைஞரணி 2 ஆவது மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
தீர்மானம் - 1
இளைஞர் அணியின் மாநில மாநாட்டிற்கு அனுமதி அளித்த ஜனநாயக பாதுகாவலர் தமிழக முதல்வருக்கு நன்றி.
தீர்மானம் - 2
தமிழகம் தொடர்ந்து முதன்மை மாநிலமாக நீடிக்க அயராது பாடுபடும் தமிழக முதல்வருக்கு இளைஞரணி என்றும் துணை நிற்கும்
முதல் 12 முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள்.
தீர்மானம் -13
நீட் தேரவை ஒழிக்கும் வரை போராடுவோம்.
நீட் தேர்வு ஒழிப்பில் இறுதி வெற்றி அடையும் வரை இளைஞரணி போராடும்.
தீர்மானம் - 14
குலக்கல்வி முறையை ஒழிக்க இளைஞரணி பாடுபடும்.
தீர்மானம் - 15
கல்வி, மருத்துவம், மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் .
தீர்மானம் -16
முதலமைச்சரே பல்கலைகழக வேந்தர். சட்ட முவடிவை விரைவில் நடைமுறை படுத்த வேண்டும்.
தீர்மானம் - 17
ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்றிட வேண்டும்.
தீர்மானம் - 18
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்களை நியமிக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும்.
தீர்மானம் - 19
ஜம்மு காஷ்மீர்க்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.
தீர்மானம் - 20
மாநில சுயாட்சி அடிப்படையில் உட்சபட்ச அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.
தீர்மானம் - 21
அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை கைபாவையாக்கிய ஒன்றிய அரசுக்கு கண்டனம்.
தீர்மானம் - 22
நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்
தீர்மானம் - 23
இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக என்பதை அம்பலபடுத்துதல்.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தி இரட்டை வேடம் போடுகிறது.
தீர்மானம் - 24
பாஜக ஆட்சியை ஒழிக்க இளைஞரணி முன்கல பணியாளர்களாக செயல்படும்.
தீர்மானம் - 25
ஆட்சி மாற்றத்திற்கான சூழல் உருவாகியிருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை ஓய மாட்டோம்.
சேலத்தில் இன்று நடைபெற்ற திமுகவின் இரண்டாவது இளைஞர் அணி மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், திமுக எம்.பி கனிமொழியும் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தனர்.
மாநாட்டு வரவேற்பு குழு சார்பில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பொருளாளர் டி ஆர் பாலு ஆகியோருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே என் நேரு
துணை பொது செயலாளர் மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பிக்கும் மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது.
மாநாட்டு மேடையில் திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகள் பெரியார் அண்ணா கலைஞர் அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திமுக தலைவரும், மாநில முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, 100 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து மாநாட்டு நிகழ்வுகளை தொடங்கி வைத்தார்.
மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்கான செல்ஃபி மேடை அமைக்கப்பட்டுள்ளது.
திமுக இளைஞரணி மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக காலை 9 மணிக்கு கட்சி கொடி ஏற்றப்படுகிறது. இந்த கட்சி கொடியினை திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி ஏற்றி வைக்கிறார். அதனை தொடர்ந்து காலை 9.30 மணிக்கு வரவேற்புக்குழு தலைவர் இளைஞரணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் வரவேற்று பேச இருக்கிறார்.
திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் சமையல் செய்யும் நபர்கள் மற்றும் சப்ளையர்கள் என மொத்தம் 5000 ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். பிரெட் அல்வா நேற்று இரவே தயாரிக்கப்பட்ட நிலையில், பிரியாணியானது இன்று அதிகாலை 2 மணி முதல் தயாராகி வருகிறது.
கணிக்கப்பட்ட 2 லட்சத்திற்கு மேல் அதிகமான தொண்டர்கள் பங்கேற்கும் வேளையில், கூட்டத்தை பொறுத்து வெஜ் பிரியாணி செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திமுக சார்பில் இன்று சுமார் 2 லட்சம் பேருக்கு உணவுகள் தயார் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணியும், மீதமுள்ள 30 ஆயிரம் பேருக்கு வெஜ் பிரியாணியும் தயாராகி வருகிறது.
மட்டன் பிரியாணியுடன் சிக்கன் 65, பிரெட் அல்வா, தயிர்சாதம் வழங்கப்பட இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வெஜ் சாப்பிடுபவர்களுக்கு வெஜ் பிரியாணியுடன் கோபி 65, பிரெட் அல்வா, தயிர் சாதம் வழங்கப்பட இருக்கிறது. இவை அனைத்தும் விறகு அடுப்பில் சுடச்சுட தயாராகி வருகிறது.
மட்டன் பிரியாணி செய்வதற்காக சுமார் 40, 000 கிலோ மட்டனும், சிக்கன் 65க்காக 2000 கிலோ சிக்கனும் வாங்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கொடியேற்றி வைக்க உள்ளார். மாநாட்டு பந்தலை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் திறந்து வைப்பார். மாநாட்டினையொட்டி மொழிப் போர் தியாகிகளின் படங்கள் திறக்கப்பட உள்ளன. இளைஞரணி செயலாளர் மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிவதுடன் தொடங்கி, மாநாட்டின் தீர்மானங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட திமுக முன்னணி தலைவர்கள் பேச உள்ளனர். மாலையில் பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உரையாற்றிட, இளைஞரணி செயலாளரின் உரைக்கு பின்னர் முதலமைச்சர் மாநாட்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்
மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களுக்காக 300 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களை ஜிபிஎஸ் முறையில் ஒருங்கிணைக்கும் வகையிலான பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் சைவம் மற்றும் அசைவம் உணவுகள் மதியம் வழங்கிட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் மாநாட்டு திடலில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாநாட்டு பந்தலில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. மாநாட்டின் பந்தலின் உள்ளே இரண்டரை லட்சம் பேர், மாநாடு சுற்றியுள்ள இடங்களில் 2.5 லட்சம் பேர் என ஐந்து லட்சம் பேர் பங்கேற்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன
சேலத்தில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு கட்சி கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இளைஞரணி மாநாட்டை கனிமொழி கொடியேற்றி தொடங்கி வைக்கிறார்.
இதை தொடர்ந்து, மாநாட்டு தலைவரும், திமுக இளைஞரணி செயலாளரும் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை உரையாற்ற உள்ளார்.
லட்சக்கணக்கில் தொண்டர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாநாடு நடைபெறும் பகுதியில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாநாடு நடைபெறும் இடம் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளதால் சேலம் மாவட்ட காவல்துறையால் ஆங்காங்கே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
Background
DMK Salem Manadu LIVE
சேலத்தில் இன்று நடைபெறும் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
திமுக இளைஞரணி மாநாடு:
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏற்ப ஒட்டுமொத்த திமுகவையும் உற்சாகப்படுத்தும் வகையிலும், உதயநிதி ஸ்டாலின் அரசியல் எதிர்காலத்தை மேலும் ஒளிரூட்டும் வகையிலும் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சேலம் அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் இருந்தே நடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் பரப்புரை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்களை கவர்ந்த டிரோன் கண்காட்சி:
மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றே சேலம் சென்று விட்டார். அங்கு, மாநாட்டிற்கான சுடரை ஏற்றி வைத்ததோடு, கன்னியாகுமரியில் தொடங்கி மாநாடு நடைபெறும் பகுதியை வந்தடைந்த புல்லட் பேரணியையும் முதலமைச்சர் ஸ்டாலின் உற்சாகமாக வரவேற்றார். இதையடுத்து, 1,500 டிரோன்கள் பங்கேற்ற கண்காட்சியும் நடைபெற்றது. அதில் அறிஞர் அண்ணாவின் உருவம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கையொப்பம் போன்ற உருவங்கள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டது. இது அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. இதைதொடர்ந்து இன்று நடைபெறும் மாநாட்டில் மாநிலம் முழுவதிலுமிருந்து, லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகள்:
மாநாட்டு பந்தலில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. மாநாட்டின் பந்தலின் உள்ளே இரண்டரை லட்சம் பேரும் மாநாடு சுற்றியுள்ள இடங்களில் 2.5 லட்சம் பேரும் என ஐந்து லட்சம் பேர் பங்கேற்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்காக 300 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் ஜிபிஎஸ் முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு அதற்கான பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் சைவம் மற்றும் அசைவம் உணவுகள் மதியம் வழங்கிட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் மாநாட்டு திடலில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நிகழ்ச்சி நிரல்:
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கொடியேற்றி வைக்க உள்ளார். மாநாட்டு பந்தலை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் திறந்து வைப்பார். மாநாட்டினையொட்டி மொழிப் போர் தியாகிகளின் படங்கள் திறக்கப்பட உள்ளன. மாநாடு இளைஞரணி செயலாளர் மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிவதுடன் தொடங்கி, மாநாட்டின் தீர்மானங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட திமுக முன்னணி தலைவர்கள் பேச உள்ளனர். மாலையில் பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இளைஞரணி செயலாளர் உரைக்கு பின்னர் முதலமைச்சர் மாநாட்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
பாதுகாப்பு பணிகள்:
லட்சக்கணக்கில் தொண்டர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாநாடு நடைபெறும் பகுதியில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாநாடு நடைபெறும் இடம் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளதால் சேலம் மாவட்ட காவல்துறை ஆங்காங்கே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -