மாநில உரிமை மீட்புக்கான இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு தொடர்பான இருசக்கர பேரணி கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை என நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் 40க்கும் மேற்பட்ட இளைஞரணியினர் பேரணி சென்று வருகின்றனர்.


 




திமுக இளைஞரணி செயலாளர், தமிழக  மேம்பாட்டு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநில உரிமை மீட்பு இரண்டாவது மாநில மாநாட்டிற்கான இருசக்கர வாகன பிரச்சார பேரணியை கடந்த 15-ஆம் தேதி கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முன்பாக தொடங்கி வைத்தார். 


 


 




இந்த பேரணி தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிக்கும் சென்று வரும் வகையில்  திமுக இளைஞரணி நிர்வாகிகள் வாகனப் பேரணி சென்று வருகின்றனர். கரூர் வந்த பேரணி இளைஞர்களுக்கு மேயர் கவிதா தலைமையில் திமுகவினர் பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.


 


 




கரூரில் நூற்றுக்கணக்கான திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்ற இந்த இருசக்கர வாகன பேரணியானது, கோவை சாலை, பேருந்து நிலையம், திண்ணப்பா சாலை, சர்ச் கார்னர் வெங்கமேடு, ஐந்து ரோடு, வாங்கல், காந்திகிராமம், தான் தோன்றிமலை என கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய பகுதிகளிளும், பள்ளப்பட்டி, குளித்தலை உள்ளிட்ட நகராட்சி பகுதிகளிலும் பேரணி சென்று வருகிறது. பொதுமக்களிடம் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்துக்களை பெற்று வருகின்றனர்.